Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இராணுவ தினம் – இந்திய இராணுவத்தில் உள்ள புதுமை படைப்பாளர்களுக்கு பிரதமர் சான்றிதழ் வழங்கினார்

இராணுவ தினம் – இந்திய இராணுவத்தில் உள்ள புதுமை படைப்பாளர்களுக்கு பிரதமர் சான்றிதழ் வழங்கினார்

இராணுவ தினம் – இந்திய இராணுவத்தில் உள்ள புதுமை படைப்பாளர்களுக்கு பிரதமர் சான்றிதழ் வழங்கினார்

இந்திய இராணுவத்தில் புதிய படைப்புகளை கொண்டு வந்த அலுவலர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சான்றிதழ்களை இன்று வழங்கினார். தொடர்பியல், தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகள் ஆகிய துறைகளில் முக்கியமான புதிய கண்டுபிடிப்புகளை செய்த இந்த அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

இராணுவ தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதியின் இல்லத்தில் நடைபெற்ற “அட் ஹோம்” நிகழ்ச்சியின்போது பிரதமர் இந்த சான்றிதழ்களை வழங்கினார். பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

புதிய கண்டுபிடிப்புகளை செய்த அலுவலர்கள் தங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து இராணுவ தளபதியின் முன்னிலையில் பிரதமரிடம் விளக்கினர்.