பி.எம்.இந்தியா
மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய முன்னாள் பிரதம மந்திரி லால் கிருஷ்ணா அத்வானி ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜி, மந்திரிகள் சபையில் உள்ள மற்ற சக அமைச்சர்கள், பாராளுமன்றத்தில் எனது சக உறுப்பினர்கள், விருது வென்ற காவல் படையினர், ஹாட் ஸ்பிரிங் சம்பவத்தின் வீர மகன்கள், உயர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கு கூடியிருக்கும் பிற பிரமுகர்கள் மற்றும் என் அன்பான சகோதர, சகோதரிகளே,
நம் அனைவரின் வாழ்நாளிலும் வீரத்திற்கு தலைவணங்க வேண்டிய பல்வேறு தருணங்கள் வருகின்றன. அப்போது நாம் பெருமை கொண்டவர்களாக இருந்தாலும், நமக்குள் உணர்ச்சிகளின் திசைவேகத்தையும் உணர்கிறோம். இந்த கணம் எனக்கு அதுபோன்றது.
நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு தனிநபரையும் நான் மரியாதையுடன் வணங்குகிறேன்; காவலர் நினைவு தினத்திற்காக இங்கு கூடியிருக்கும் தியாகிகளின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இன்றைய இந்த நாள் நமது காவல் மற்றும் துணை ராணுவ படைகள், மக்களுக்காக செய்த உயரிய தியாகத்தையும், மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவையையும் நினைவு கூறும் நாள்.
காவலர் நினைவு தினமானது, லடாக்கில் பனிபடர்ந்த மலையில் தேசத்தின் முதல் எல்லையை பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சல் மிக்க போலீஸ் படையின் கதைகளையும் நினைவுகூறும் நிகழ்வாகும்.
மேலும் இந்த நாள், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரையிலும், தங்களின் இன்னுயிரை தந்த காவல் படையின் ஆயிரக்கணக்கான தியாகிகள், அனைத்தையும் இழந்தவர்கள், கடமைக்காகவே தங்களின் இளமையையும், வாழ்வையும் அர்ப்பணித்தவர்களை நினைவு ஊட்டுகிறது. அத்தகைய துணிச்சலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். நாட்டிற்காக மிகப்பெரிய தியாகம் செய்த ஒவ்வொருவரையும் நான் வணங்குகிறேன், ஒவ்வொரு தியாகிகளின் குடும்பத்தாரையும் வணங்குகிறேன், அவர்களில் பல குடும்ப உறுப்பினர்களும் இங்கே இருக்கிறார்கள்.
நண்பர்களே,
தேசத்திற்காக அர்ப்பணிப்பு மற்றும் சேவை புரிந்தவர்களின் அழியாத கதைகளுக்கான சின்னமாக விளங்கும் தேசிய காவலர் நினைவகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்த நினைவுச்சின்னத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலை ஒவ்வொரு காவல் படையினரின் திறன், வீரம், சேவை மற்றும் உணர்ச்சிகளின் சின்னமாகும்.
பாறைக்கு அடியில் பாய்ந்தோடும் தண்ணீர் நம் சமுதாயத்தில் எப்பொழுதும் ஒற்றுமைக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. நினைவகத்தில் உள்ள வீரச் சுவரில், பல்வேறு தனிப்பட்ட சவால்களை எதிர்த்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உயரிய தியாகத்தை செய்த 34,844 போலீசாரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
நமது போலீசார் மற்றும் துணை ராணுவ படையின் புகழ்பெற்ற வரலாறு பற்றிய பதிவுகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த நினைவகத்தில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களும், ஒவ்வொரு குடிமகனையும் ஊக்குவிக்கும், இளம் சக போலீசாரை ஊக்குவிக்கும், நம் நாட்டையும், நம் குழந்தைகளையும் எதிர்காலத்தில் ஊக்கப்படுத்தும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன்.
பகல், இரவு பாராமல் எந்நேரமும் உறுதியுடன் பணியாற்றும் விதம், மழை, வெயில், பனி என எந்த பருவநிலையையும் பார்க்காமலும், பண்டிகை உள்ளிட்ட அனைத்தையும் தவிர்த்து பணியாற்றும் விதமுமே உங்களை நினைவுபடுத்துகிறது. அது மாதிரியான, அதே நினைவுகள் இந்த நினைவுச்சின்னத்தை பார்க்கும் போதும், நமக்குள் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க விரும்பும் சக்திகள் ஏமாற்றமடைந்துள்ளன என்பதே உங்கள் உன்னத எண்ணங்களின் சாட்சியம். நாட்டில் பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்க முயன்ற பல்வேறு முயற்சிகளை நீங்கள் முறியடித்துள்ளீர்கள்.
இத்தகைய சதித்திட்டங்கள், இவை பற்றிய விவரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, இந்த வகையான துணிச்சலுக்காக எப்பொழுதும் நீங்கள் பொதுவெளியில் பாராட்டப்பட்டதில்லை, இந்த நாடும், குடிமக்களும் ஒவ்வொரு தருணத்தையும் அமைதியாக கடந்து செல்கிறார்கள் என்றால், அது நீங்கள் கடமை மீது கொண்ட பக்தி மற்றும் உணர்வுகளால் மட்டுமே சாத்தியமாகிறது.
நண்பர்களே,
ஜம்மு காஷ்மீரில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரையும் இன்று நினைவில் கொள்ள வேண்டும். அதே போல, நாட்டிற்குள்ளே நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் பணியாற்றி வரும் ஒவ்வொரு வீரரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அங்குள்ள வீரர்கள் தங்களின் சிறப்பான பணியின் மூலம், அமைதியை நிலைநிறுத்துவதை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்.
நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் எண்ணிக்கை இன்று குறைந்து வருவதற்கும், அந்தப் பகுதிகளில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் பெருமளவில் இணைவதற்கும், நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று, நாம் வடகிழக்கில் உள்ள நமது சக வீரர்களால் செய்யப்பட்ட வீரம் மற்றும் தியாகங்களையும் உணர்கிறோம். அமைதிக்கும், செழிப்புக்கும் அடையாளமாக விளங்கும் வடகிழக்கின் அபிவிருத்தியில் உங்களின் பங்களிப்பும் உள்ளது.
நண்பர்களே,
இன்றைய தினம், இயற்கை பேரிடர் மற்றும் விபரீத காலகட்டங்களில் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள், பேரிடர் மேலாண்மைக்காக அர்ப்பணித்துக் கொண்ட பெரிய அளவில் பேசப்படாத வீரர்களின் சேவையையும் நினைவில் கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளது.
இன்று நாட்டு மக்களுக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் எந்த இடத்திலும் எந்த இயற்கை பேரிடர் நடந்தாலும் அங்கு NDRF மற்றும் SDRF என எழுதப்பட்ட சீருடைகள் அணிந்து இரவும், பகலும் அயராது கடினமாக உழைத்து மக்களின் உயிர்களை காப்பாற்றும் நம் வீரர்களை பார்த்திருப்பீர்கள்.
இருப்பினும், அதே வீரர்கள்தான் காக்கி சீருடை அணிந்த நமது காவல் படையினர் என்பதை இந்த நாடு அறியாது. அவர்களின் தைரியம், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை இந்த நாடு மறக்கக் கூடாது! ரயில் விபத்தின் போதும், தீ விபத்தின் போதும், படகு கவிழ்ந்த விபத்தின் போதும், கட்டிடம் இடிந்த விபத்தின் போதும், நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை. இந்த நினைவு நாளில், தேசத்தின் ஒவ்வொரு சொத்தையும் பாதுகாக்க நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், ஒவ்வொரு போலீஸ் முகாமிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சக காவல் படையினர் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
வீரம் மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த நினைவகம், அரசாங்கத்தின் பொறுப்புகளையும் பிரதிபலிக்கிறது. தேச பாதுகாப்புடன் தொடர்புடைய ஒவ்வொரு இந்தியருக்கும் மரியாதை தரும் சின்னமாகவும், தேச கட்டிடமாகவும் உள்ளது. இன்று, தேசிய காவல் நினைவகம் குறித்து நான் பெருமைப்படுகிறேன், ஆனாலும் எனக்கு சில கேள்விகள் உள்ளன. ஏன் சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த காவல் நினைவகம் தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்? காவலர் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணியான ஹாட் ஸ்பிரிங் சம்பவம் கூட 60 ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்திருக்கிறது. பிறகு ஏன் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்?
நண்பர்களே,
நாட்டின் காவல் படைகளுக்கு நினைவகத்தை அர்ப்பணிக்க வேண்டுமென்ற யோசனை, முதலில் 20-25 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. பின்னர், அரசாங்கம் அதற்கு ஒப்புதல் வழங்கியது. எனினும், இதற்காக களத்தில் முதல் அடியை எடுத்து வைத்தது அடல்பிகாரி வாஜ்பாய் ஜியின் அரசாங்கம்தான். பின்னர் உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அத்வானி ஜி கடந்த 2002ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இன்று, அத்வானி ஜியும் இங்கு இருக்கிறார். அவரது கனவு நனவாதை பார்த்து பெருமிதம் அடைகிறார். இருப்பினும், அவரால் அடிக்கல் நாட்டப்பட்ட பிறகும், அந்த பணியில் எந்த முன்னேற்றம் ஏற்படாதது எப்படி என்பதையும் அவர் நன்கறிவார்.
சில சட்டப்பிரச்னைகளால் இப்பணி சில காலம் நிறுத்தப்பட்டதை ஒப்புக் கொள்கிறேன். எனினும், முந்தைய அரசாங்கத்திற்கு இந்த நினைவகத்தை கட்ட வேண்டுமென்ற நோக்கம் இருந்திருந்தாலும், அவர்கள் உண்மையாக முயற்சி செய்திருந்தாலும், இந்த நினைவகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருக்கும். எனினும், முந்தைய அரசாங்கம் அத்வானி ஜியால் நிறுவப்பட்ட அடிக்கல் மீது தூசு படிய அனுமதித்துவிட்டது.
2014 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபோது மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்தோம், இன்று இந்த பெரிய கட்டிடம் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்காக கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இது நமது அரசாங்கத்தின் பணியாற்றும் பாணி இன்று, நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் இலக்கை எட்டும் பணியை நிறைவு செய்யும் கலாச்சாரம் உருவாக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த நினைவகத்திற்கான கலந்துரையாடல் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும், அதன் கோப்புகள் சுமார் 20 ஆண்டுகளாக தூசி சேர்ந்துப் போய் கிடந்தது. மத்தியில் இந்த அரசாங்கம் அமைந்த பிறகு, அந்த கோப்புகள் மீட்கப்பட்டன. மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதோடு, நாட்டிற்கும் இது அர்ப்பணிக்கப்பட்டது. இதேபோல், எண் 26, அலிபூர் சாலையில் அமைந்துள்ள பாபா சாகேப் அம்பேத்கர் இல்லத்தில் தேசிய நினைவகம் கட்டும் பணி அடல்ஜி பதவிக்காலத்தில் தொடங்கப்பட்டது. எனினும், அவரது அரசாங்கம் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு, அத்திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. எங்கள் ஆட்சி அமைந்த பிறகு, அடிக்கல் நாட்டி, அந்த நினைவகத்தை கட்டி முடித்து, இந்தாண்டு ஏப்ரலில் அதை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மகத்தான நினைவகம் இன்று உலகையே ஊக்கவிக்கும் விதத்தில் அமைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
சில சமயங்களில், என் மனதில் சில தீவிரமான கேள்விகள் புரள்கின்றன, நாட்டிற்காக உயரிய தியாகத்தை செய்தவர்கள், நாட்டிற்காக தனது துணிச்சலை காட்டியவர்கள், அனைத்தையும் நாட்டிற்காகவும், பொதுமக்களுக்காகவும் தியாகம் செய்தவர்கள் விஷயத்தில் முந்தைய அரசு இறுமாப்பான அணுகுமுறையை கொண்டிருந்த பின்னணியின் காரணம் என்ன? இது எங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இல்லை. உணவு இல்லாமல் பட்டினியாக கிடந்தாலும் நாட்டின் பெருமைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த மக்கள் தான் நாங்கள்.
தேசத்தை கட்டமைத்த பாதுகாவலர்கள், தேச கட்டமைப்பில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்தும் அந்த பாரம்பரியத்தை ஸ்தாபிப்பதில் கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்பது எனக்கு பெருமை அளிக்கிறது.
இன்று, தேசிய காவல் நினைவகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிகழ்வும் அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சி தான். இன்றிலிருந்து சரியாக 10 நாட்கள், அக்டோபர் 31ம் தேதி குஜராத்தில் உள்ள கெவாடியாவில் வானுயர்ந்த சர்தார் பாய் படேல் சிலையை அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். உலகிலேயே மிக உயரமான அந்த சிலை, நாட்டிற்காக சர்தார் சாகேப்பின் பங்களிப்பை பிரதிபலிக்கும்.
நண்பர்களே,
இந்த நினைவகம் வெறும் சுற்றிப் பார்த்துச் செல்லும் இடமாக மட்டும் இருக்காது என நம்புகிறேன். காவல் படையினரின் துணிச்சலை பற்றிய தகவல்களை வழங்கும் இந்த நினைவகமானது, அடுத்த தலைமுறையினருக்கு நாட்டின் பாரம்பரியம் மற்றும் மகிமை பற்றிய அறிவை வழங்குவதற்கான ஒரு அர்த்தமான இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காக கடினமாக உழைத்து, தியாகங்களைச் செய்த ஒவ்வொரு தியாகிகளின் சிலைகளும் அவர்கள் படித்த பள்ளிகளில் நிறுவப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறேன். அந்த துணிச்சலான இதயங்களின் சிலைகளை நமது மாணவர்கள் பார்க்கும் போதெல்லாம், ஒரு புதிய உத்வேகம் பிறக்கும்.
நண்பர்களே,
ஓரிடத்தில் நமது காவல் படை, துணை ராணுவம் அல்லது ராணுவ வீரரோ மரணத்தை தழுவும் போது, இயற்கையாகவே அவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒருவகையான சூழலை நாம் உருவாக்க வேண்டும், இந்த காவல் நினைவகம், தியாகிகளின் சிலைகள் மற்றும் அவர்களது கதைகள் அந்த திசை நோக்கி நம்மை முன்னெடுத்துச் செல்லும். இன்று, இந்த சந்தர்ப்பத்தில், மக்களுக்கு முன்னால் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு ஒன்றை செய்ய விரும்புகிறேன்.
நண்பர்களே,
நம் நாட்டில் இயற்கை பேரிடர் நடந்தாலோ, துயர சம்பவங்கள் நடந்தாலோ முதலில் உதவ வந்து நிற்பது நமது காவல் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள்தான். இவர்கள் இல்லாமல், தேசிய பேரிடர் மீட்பு படையைக் (NDRF) கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. அவசர காலங்களில் அவர்களின் உயிரை பணயம் வைத்து மற்ற உயிர்களை பாதுகாக்கிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு கடினமான காலங்களில் இந்த விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வதில் என்பது உண்மை தான். நிலைமை சீரானதும் அவர்கள் தங்களின் இயல்பான பணியிடத்திற்கோ அல்லது பட்டாலியன்களுக்கோ திரும்பிச் செல்கின்றனர். இன்று, பேரழிவு மேலாண்மை காலத்தில் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அந்த துணிச்சலான இதயங்களுக்கான ஒரு புதிய கௌரவத்தை நான் அறிவிக்க உள்ளேன்.
இந்த விருதானது, தேசத் தாயின் வீரமிக்க மகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ம் தேதி அவரது பிறந்தநாள் விழாவின் போது வழங்கப்படும். இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றிய, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியவரான சுபாஷ் சந்திர போஸ் பெயரை வைப்பதன் மூலம், இந்த விருது மேலும் போற்றத்தக்கதாகிறது. அவரால் நிறுவப்பட்ட ஆசாத் இந்து சர்கார் நிறுவி இன்றோடு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது இன்னும் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.
சகோதர, சகோதரிகளே,
புகழ்பெற்ற பாரம்பரியத்துடன் வீரம், தைரியம் மற்றும் தியாகம் ஆகிய கண்கவர் நிகழ்வு நடந்துள்ள இந்தநேரத்தில், எதிர்கால சவால்கள் பற்றிய உங்கள் கவனத்தை பெற விரும்புகிறேன்.
இன்று, தொழில்நுட்பமே முற்றிலும் வாழ்க்கை புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பயன்படுத்தி குற்றங்கள் நடப்பது வெளிப்படையாக தெரிகிறது. குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். வதந்திகள் மற்றும் இணைய குற்றங்கள் ஒரு பெரிய சவாலாக வெளிப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மற்ற அமைப்பினருடன் சிறந்த ஒருங்கிணைப்பைத் தக்க வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்புகளையும் அதன் செயல்பாட்டில் உள்ளடக்கி செயல்பட வேண்டும்.
நண்பர்களே,
இந்த திசையில், நாட்டில் பலபயனுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமூக ஊடகம் மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ எப்ஐஆர் பதிவும் வசதியை காவல் துறை வழங்கி உள்ளது. போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் சமூக ஊடகங்கள் மூலம் கையாளப்படுகின்றன. இந்த முயற்சி, பாராட்டுக்குரியது, இதையே சிறிய அளவிலான சரிபார்ப்போடு, புகார்களை வழக்கமாக பதிவு செய்யும் நிலைக்கு நாம் கொண்டு சென்றால், யாரும் காவல் நிலையத்திற்கு வர வேண்டிய அவசியம் இருக்காது.
நண்பர்களே,
கடந்த வருடம் இந்த அரசாங்கம், காவல் துறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தங்களுக்கான முன்முயற்சியை மேற்கொண்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எம்.பி.எஃப் அல்லது காவலர் திட்டங்கள் நவீனமயமாக்கம் என்பதன் பொருள் 2019-20ம் ஆண்டில் சுமார் ரூ.45,000 கோடி செலவில் காவல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் அல்லது பயிற்சி ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை நவீனமயமாக்குதல் மற்றும் நவீன ஆயுதங்களுடன் விரைவான வேகத்தில் காவல் படையியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெறச் செய்தல் உள்ளிட்ட நவீனமயமாக்கல் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். தவிர, காவல் நிலையங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் குற்றம் மற்றும் குற்றவாளிகளின் தகவல்கள் அடங்கிய ஒரு தேசிய தரவுத்தளத்தை உருவாக்க திட்டம் செயல்பட்டு வருகிறது. தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற நீதி நிர்வாகத்தின் மற்ற அமைப்புகளுடன் இந்த தரவுத்தளத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், நமது சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை வழங்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இருப்பினும், தொழில்நுட்பங்கள் என்பவை மனித உணர்ச்சிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. அந்த ஒரு காரணமே, காவல் படையின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றனர். நீங்கள் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சுரண்டப்பட்ட பிரிவினரை பாதுகாப்பதற்கான முதல் வரிசையில் உள்ளீர்கள். கடினமான காலங்களில் உங்களைத்தான் மக்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்களது நண்பராக உதவிக்கரம் நீட்டும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
எனவே, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது உங்களின் கடமை, அதோடு உணர்வுப்பூர்வமான விஷயங்களில் மக்களின் குறைகளை புரிந்து கொண்டு, அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உண்டு.
காவல் நிலையத்திற்கு வரும் பாதிக்கப்பட்ட குவளை நபரிடம் இரண்டு வார்த்தைகள் ஆறுதலாக பேசி, ஒரு குளிர்ந்த நீரை குடிக்க தருவதன் மூலம் காவல் துறைக்கும், சமூகத்திற்கும் இடையேயான பந்தம் வலுவாக மாறும். ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ஒரு அமைப்பு இருக்கும் போது, அந்த பந்தம் மேலும் வலுவடையும், பலமாகும். இது சமுதாயத்தின் உதவியுடன் குற்றத்தை கட்டுப்படுத்துவதில் ஒரு பெரிய முறையில் உங்களுக்கு உதவும். இந்த விஷயத்தை நான் உறுதியாக நம்புகிறேன்.
இறுதியாக, காவல் நினைவு நினைத்தையொட்டி இந்த நவீன தேசிய காவல் நினைவகம் நிகழ்ச்சிக்காக மீண்டும் ஒருமுறை நான் உங்களை வாழ்த்துகிறேன்.
குறிப்பாக, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் இந்த நினைவகத்தை சுற்றிப்பார்த்து, காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென பிரத்யேகமாக வலியுறுத்துகிறேன். மேலும், அவர்கள் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த காவல் படையினருக்கு சிறப்பு கவுரவம் செலுத்த வேண்டும். அவர்கள் அதிகாரிகளின் உதவியுடன், நினைவகத்தை சுற்றிப்பார்க்க திட்டமிட வேண்டும். வரவிருக்கும் பண்டிகைகளுக்காக காவல் துறையினரின் குடும்பங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, உங்கள் கடமை மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்கி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
Tributes to our brave police personnel. Dedicating to the nation the National Police Memorial. https://t.co/yp49snY5EN
— Narendra Modi (@narendramodi) October 21, 2018
Today, on #PoliceCommemorationDay, PM @narendramodi inaugurated the National Police Memorial in Delhi.
— PMO India (@PMOIndia) October 21, 2018
He paid tributes to the policemen and policewomen serving India.
He also paid homage to all those police personnel who lost their lives in the line of duty. pic.twitter.com/BKCz4CQIwu
During the programming marking #PoliceCommemorationDay and the inauguration of the National Police Memorial, PM @narendramodi also inaugurated a museum in the same complex as the memorial. pic.twitter.com/Avc8SwFdxk
— PMO India (@PMOIndia) October 21, 2018
Today, we not only dedicate the National Police Memorial to the nation but also salute our police personnel for their service.
— Narendra Modi (@narendramodi) October 21, 2018
I am sure this Memorial will stand as a reminder of the courage and sacrifice of policemen and policewomen, who keep the nation safe. pic.twitter.com/H6mQ2zydkM
Had the opportunity to interact with surviving members of the Hot Springs incident.
— Narendra Modi (@narendramodi) October 21, 2018
The bravery of those associated with the incident will never be forgotten. pic.twitter.com/lG8f1XGLQh
Whenever an unfortunate disaster strikes, it is our police personnel who are working round the clock, at the forefront of rescue and relief operations. Proud of them! pic.twitter.com/Oqirw4i5FW
— Narendra Modi (@narendramodi) October 21, 2018
Made a special announcement at the National Police Memorial. pic.twitter.com/ExJPBAmYET
— Narendra Modi (@narendramodi) October 21, 2018