Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அமெரிக்க மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  மறைந்த புஷ் நெருக்கடியான காலத்தில் சிறந்த தலைவராக இருந்தவர் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் இந்திய- அமெரிக்க உறவில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவால் மிகச்சிறந்த நண்பரை இழந்து விட்டோம்.  அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிரதமர் மேலும் கூறியிருக்கிறார்.