Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமரும் பிரான்ஸ் அதிபரும் மெட்ரோ ரயில் மூலம் குர்கானுக்கு பயணம்

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு. பிரான்காயிஸ் ஹாலண்டேயும் மெட்ரோ ரயில் மூலம் தில்லியில் இருந்து குர்கான் சென்றனர்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் பருவ நிலை மாற்றத்தின் சவால்கள் குறித்து உலக நாடுகள் எவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நினைவு கூர்ந்தார். பாரீசில் நடந்த சி.ஒ.பி.-21 உச்சி மாநிட்டின்போது எடுக்கப்பட்ட இரு முக்கிய முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் ஒன்றான “புதுமை படைப்பு இயக்கத்தின்” முக்கிய நோக்கம் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் மக்களுக்கு தூய்மையான எரிசக்தியை கொண்டு சேர்த்தல். மற்றொன்று சர்வதேச சூரியசக்தி கூட்டணி. இந்த சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூலம் அதிகப்படியான சூரியஒளி கிடைக்கப்படும் நாடுகளில் இருந்த சூரியசக்தி மூலம் எரிசக்த்தியை உருவாக்குதல்.

பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் இந்த சர்வதேச சூரியசக்தி கூட்டணி உயிர் நாடியாக அமையும் என்று பிரதமர் கூறினார். இது குறித்து பேசுகையில் உயர்ந்து வரும் கடல் மட்டத்தினால் சிறிய தீவுகளுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

ஐக்கிய நாடுகள்போல் இந்த சர்வதேச சூரியசக்தி கூட்டணி சுயேச்சையான அமைப்பாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.