பி.எம்.இந்தியா
வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்தியில் கண்காணிப்புக் கட்டமைப்பை நிறுவும் ஆலோசனைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வர்த்தக அமைச்சகம், மேம்பாட்டு முகமையாக செயல்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகள், ஆகியவை வேளாண் ஏற்றுமதிக் கொள்கையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும்.
வேளாண் துறையில் உலக சக்தியாக இந்தியாவை உருவாக்குதல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் பொருத்தமான கொள்கை திட்டங்கள் மூலம் இந்திய வேளாண் வளங்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையாகும்.
நோக்கங்கள்:
—–
எஸ் எம் பி – கீதா