Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அண்டார்ட்டிக்காவில் வின்சன் மலையேறச் செல்லும் ஆருனிமா சின்ஹாவிடம் மூவண்ணக் கொடியைப் பிரதமர் ஒப்படைத்தார்.


அண்டார்ட்டிக்காவில் வின்சன் மலையேற்றத்தைத் தொடங்குவதற்கு அடையாளமாக ஆருனிமா சின்ஹாவிடம் மூவண்ணக் கொடியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (12.12.2018) ஒப்படைத்தார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதலாவது பெண் மாற்றுத்திறனாளியான திருமிகு. ஆருனிமா சின்ஹா புதுதில்லியில் பிரதமரை சந்தித்து அண்டார்ட்டிக்காவில் தாம் மேற்கொள்ளவிருக்கும் மலையேற்றம் குறித்து எடுத்துரைத்தார். மனம் கவரும் அவரது சாதனைகளுக்காகப் பாராட்டுத் தெரிவித்த திரு.மோடி, தற்போதைய அவரின் முயற்சிக்காக தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஐந்து கண்டங்களில் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஏறி, வெற்றி கண்ட ஆருனிமா சின்ஹா இத்தகைய அளப்பரிய சாதனையை நிகழ்த்திய முதலாவது பெண் மாற்றுத்திறனாளி என்ற பெருமையைப் பெறுகிறார்.

*******

வி.கீ/எஸ்எம்பி/கோ

The Prime Minister, Shri Narendra Modi, today, handed over the tricolour flag to Arunima Sinha, marking the beginning of her expedition to Mount Vinson,