பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதிமுறைகள் குறித்த தொழிற்சங்கங்கள் சட்டம், 1926-ல் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பயன்கள்:
ஒப்புதல் அளிக்கப்பட்டதால் பின்வரும் பயன்கள் கிடைக்கும்:
முத்தரப்பு அமைப்புகளில் தொழிலாளர் தரப்புப் பிரதிநிதிகளை அரசு நியமனம் செய்யும் நடைமுறை அதிக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற உத்தேச மசோதா வகை செய்யும். இதன்படி அங்கீகாரம் அளிக்கப்படும் தொழிற்சங்கங்கள் தொழில் நல்லிணக்கத்தைப் பராமரிக்கும் பொறுப்புக்கு உள்ளாகும் வகையில் இருக்கும். மத்திய / மாநில அளவில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதால், வெவ்வேறு துறைகளில் இந்த அமைப்புகள் பிரிவுகளாக உருவாகும் நிலை குறையும். அங்கீகாரம் அளிக்கப்படும் தொழிற்சங்கங்களுக்கு மத்திய அல்லது மாநில அளவில் குறிப்பிட்ட பங்களிப்புகள் ஒதுக்கப்படும்.
****