Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பில் 124-வது சட்ட திருத்த மசோதா 2019 நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு


மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பு (124-வது சட்ட திருத்தம்) மசோதா 2019 நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“மாநிலங்கள் அவையில் இந்திய அரசியலமைப்பு (124-வது சட்ட திருத்தம்) மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மசோதாவிற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவையில் துடிப்பான விவாதம் நடைபெற்றது, அதில் பலர் உறுப்பினர்கள் மிக ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் இந்த இந்திய அரசியலமைப்பு (124-வது சட்ட திருத்தம்) மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது சமூக நீதிக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றி. இது நமது இளைஞர்கள் அவர்களது திறமையை வெளிக்காட்டவும் நமது நாட்டின் மாற்றத்திற்கு பங்களிப்பதற்கும் பரவலான வாய்ப்பை அளிக்கும்.

இந்திய அரசியலமைப்பு (124-வது சட்ட திருத்தம்) மசோதா 2019 நிறைவேற்றியதன் மூலம், வலிமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க விரும்பிய, நமது அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களுக்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் நாம் அஞ்சலி செலுத்தி உள்ளோம்.”, என்று பிரதமர் கூறியுள்ளார்.