பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மறுசீரமைப்புச் சட்டப் பிரிவு 11 மற்றும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 9ல் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தது. வங்காள தேசத்திற்கு சொந்தமான 51 உறைவிடங்களையும், இந்தியாவுக்கு சொந்தமான 111 உறைவிடங்களையும், மேற்கு வங்கம் கூச் பீகார் மாவட்டத்தில் 31 ஜுலை 2015 அன்று பரிமாற்றம் செய்ததை அடுத்து, தேர்தல் ஆணையம், பாராளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் மறுசீரமைப்பு செய்வதற்கு ஏதுவாக இந்த சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் நூறாவது திருத்தத்துக்கும், தேர்தல் (திருத்தம்) சட்டம் 2016 என்ற புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது.
பின்னணி
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் மூலமாக, வங்காளதேசத்தைச் சேர்ந்த 51 உறைவிடங்களும், இந்தியாவைச் சேர்ந்த 111 உறைவிடங்களும், வங்காள தேசத்துடன் 31 ஜுலை 2015 அன்று பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன. இந்த பரிமாற்றம், மேற்கு வங்கத்தின் நிலவியலையே மாற்றி அமைத்தது. இந்த மாற்றத்தை தொகுதிகளிலும் செய்வதற்காக, தேர்தல் ஆணையம், தொகுதி மறு சீரமைப்புச் சட்டப் பிரிவு 11 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 9 ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரியது. வங்காள தேசத்திடமிருந்து பெறப்பட்ட புதிய இடம் இந்தியாவின் பகுதியாக மாறியுள்ளது. இந்த இடத்திலும், தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், புதிதாக தேர்தல் சட்டம் (திருத்தம்) 2016 என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.