Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்


காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் வெறுக்கத்தக்கது. கோழைத்தனமான இத்தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். துணிச்சல் மிக்க நமது பாதுகாப்புப் படையினரின் தியாகங்கள் ஒருபோதும் வீணாகாது. வீரமரணமடைந்த அந்த வீரர்களின் குடும்பத்தினருடன் ஒட்டு மொத்த நாடும் தோளோடு தோள் நிற்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.