பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, “2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு சட்ட ரீதியான அறிவிக்கைகளை, 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு” 14 துணைப் பிரிவு (2)-ன் கீழ் வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது உறுப்பினர்களை, இந்திய தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைகளின்படி பரிந்துரை செய்துள்ள தேதிகளில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்க இந்த அறிவிக்கை அழைப்பு விடுக்கிறது.
விளைவு:
அறிவிக்கைகள் வெளியிடப்பட்டதும், 17-வது மக்களவைக்கான தேர்தல் நடைமுறை தொடங்கும்.