Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரில் ரயில்வே பாலத்திட்டங்களின் பெயர் பலகைகளை பிரதமர் திறந்து வைத்தார்.

பீகாரில் ரயில்வே பாலத்திட்டங்களின் பெயர் பலகைகளை பிரதமர் திறந்து வைத்தார்.


பீகார் தலைவர் பாட்னாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில் பாதை மற்றும் சாலைப் பாலத்தின் ரயில்வே பகுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி ஹாஜிப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முங்கேர் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மற்றும் சாலைப் பாலத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கத்துக்கான பெயர் பலகையையும், ராஜேந்திர பாலத்திற்கு புல்லுக்கு அருகே மோக்காமா என்ற இடத்தில் கூடுதல் பாலத்திற்கான அடிக்கல்லையும் பிரதமர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெருந்திரளான மக்களிடையே உரையாற்றிய பிரதமர் புதிதாக அர்பணிக்கப்பட்டுள்ள பாலம் போக்குவரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அந்தப் பகுதி மக்களிடையே பொருளாதார நிலமையையும் அது மேம்படுத்தும் என்றும் கூறினார். இந்தத் திட்டத்திற்கு திரு அடல் பிஹாரி வாஜ்பேய் பிரதமராகவும் தற்போதைய பீஹார் முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் ரயில்வே அமைச்சராகவும் இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது என்பதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

நாடு முழுமைக்குமான நிலையான வளர்ச்சிக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்கள் மேம்பாடு அடைய வேண்டியது அவசியம் என்ற பிரதமர் வலியுறுத்தினார். இந்திய மேம்பாட்டின் நரம்பு மையம் கிழக்கு இந்தியாவில் தான் அமைந்துள்ளது என்றார் அவர். இந்தியா வளர்ச்சி பெற வேண்டுமானால் பீஹார் மாநிலம் வளர்ச்சி பெற்றாக வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

அடிப்படை வசதிகள் குறிப்பாக சாலை மற்றும் ரயில் பாதைகள் மேம்பாட்டின் விதைகளை தூவி முன்னேற்றத்துக்கு வேகம் அளிக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ரயில்வேக்கள் முற்றிலுமாக நவீனமயமாக வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.