Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் பொலிவியாவுக்கும் இடையில் ரயில்வே துறை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொலிவியாவில் நிலம் மற்றும் நீர்வழித்தட ரயில்வே ஒருங்கிணைப்பு சரக்குப் போக்குவரத்து திட்டம் தொடர்பாக இந்தியாவுக்கும் பொலிவியாவுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், நிபுணர் கூட்டங்கள், கருத்தரங்குகள், தொழில்நுணுக்கப் பயணங்கள் மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2019ல் கையெழுத்திடப்பட்டது.