பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கணினிசார் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள் குறித்து அறிவுப் பரிமாற்றம், கண்டறிதல், தீர்வு காணுதல் மற்றும் தடுப்பதில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 2019ல் கையெழுத்திடப்பட்டது.