Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் 50-வது உதய தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை   

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் 50-வது உதய தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை   

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் 50-வது உதய தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை   

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் 50-வது உதய தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை   


நாட்டின் உடமைகள் மற்றும் கவுரவத்தை பேணி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எனது அருமை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை நண்பர்களே!

இங்கு குழுமியுள்ள வீரமிக்க குடும்பத்தினரே!

சகோதர, சகோதரிகளே!

இந்த 50-வது உதயதின விழாவில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஒரு அமைப்பு 50 ஆண்டுகளை நிறைவு செய்வது வியத்தகு சாதனையாகும். மத்திய  தொழிலகப் பாதுகாப்புப் படை இந்த உயரிய சாதனையை எட்டியதற்கு, இந்த அமைப்பு மட்டுமின்றி, கடந்த 50 ஆண்டுகளாக அயராது பணியாற்றி இந்த அமைப்பை புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றவர்களான, இந்த அமைப்பில் பணியாற்றும் அனைத்து நல்ல மனிதர்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாகும். இந்த அமைப்பின் மனிதவள மேம்பாட்டிற்கும், அவர்கள் பாடுபட்டுள்ளனர். இன்று நாம் 50-வது ஆண்டு விழா அல்லது பொன்விழாவை கொண்டாடுகிறோம். இந்த அமைப்பை இதுபோன்ற உயரிய நிலைக்கு அழைத்துச்செல்ல கடந்த 50 ஆண்டுகளில் அயராது பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களில் சிலர் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

 

ஆனால், சகோதார, சகோதரிகளே,

நமது அண்டை நாடு எதிரியாக உள்ள நிலையில், உங்கள் அனைவரின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். நேரடியாக போரிட தகுதியற்ற அண்டை நாட்டினர், இந்தியாவிற்குள்ளேயே  சதி திட்டம் தீட்டி, அவர்களது மண்ணில் பல்வேறு வகையான தீவிரவாதத்தை   உருவாக்கி, நாட்டிற்கும் நாட்டின் உடமைகளுக்கும் சவால் விடுத்து வருகின்றனர்.

சற்றுமுன்கூட, இந்த அணிவகுப்பு நடைபெறும்போது, வளமான இந்தியாவை படைக்க இதுபோன்ற படைகள் அவசியம் என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன். அணிவகுப்புக்கு தலைமையேற்ற கமாண்டர் மற்றும் அனைத்து சிப்பாய்கள் மற்றும்  அணிவகுப்பில் பங்கு பெற்ற அனைத்து அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன். தலைசிறந்த பணியாற்றியதற்காக ஏராளமான நண்பர்கள் இன்று (10.03.2019) இங்கு பதக்கங்களை பெற்றுள்ளனர். அதற்காக நான் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். மேலும், இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, காவலர் பதக்கம் மற்றும் உயிர்காக்கும் செயலுக்கான பதக்கம் பெற்றவர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே!

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய நீங்கள் அனைவரும், நாட்டின் உடமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறீர்கள். நாட்டின் புதிய மற்றும் நவீன அமைப்புகளை பாதுகாப்பதற்காகவும், நாட்டின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலும் நீங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறீர்கள். நம் நாட்டில் உள்ள பல்வேறு பாதுகாப்புப் படைகள், பிரிட்டிஷ் ஆட்சி கால நடைமுறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவையாகும். ஒரு சில அமைப்புகள் மட்டுமே சுதந்திரத்திற்குப் பிறகு, நமது தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. இவை, சுதந்திர இந்தியாவில் உருவான அமைப்புகளாகும். அவற்றுள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை மிக முக்கியமானதாகும். எனவே, இந்த அமைப்பின் பிறப்பு, செழுமை, வளர்ச்சி, விரிவாக்கம் போன்றவை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொன்விழா கொண்டாடும் இந்த தருணம், அனைவருக்கும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடியதாகும். ஏனெனில், இந்த அமைப்புக்கு தலைமை வகித்த ஒவ்வொருவரும் அதன் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்துள்ளீர்கள்.

இதுபோன்ற அமைப்பை அரசாங்கம் அல்லது அமைச்சரவையால்  ஒரு கோப்புக்கு அனுமதி அளிப்பதன் மூலம் மட்டும் உருவாக்கிவிட முடியாது. கடந்த 50 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவது என்பது மிகச்சிறப்புக்குரியதாகும். நீங்கள் ஆண்டு முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த ஒரு அசம்பாவிதத்தையும் தவிர்த்து,  நாட்டைக் காக்க, நீங்கள் உங்களது கை, கால் மற்றும் உடலை எப்போதும் விறைப்புடன் வைத்திருக்க வேண்டும். இது சாதாரண காரியமல்ல. ஒரு பிரதமர் என்ற முறையில், பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவன் என்ற அடிப்படையில், என்னால் இதனை முழுமையாக உணர முடிகிறது. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் ஒரு அமைப்பை பாதுகாப்பதைவிட, ஒரு தனிநபரை பாதுகாப்பது மிகுந்த சிரமத்திற்குரிய பணியாகும்.

நீங்கள் ஒரு அமைப்பின் வாசலை மட்டும் பாதுகாப்பதில்லை. மாறாக, நாட்டின் வளர்ச்சிப் பாதையை பாதுகாக்கிறீர்கள். எனது அனுபவத்தைப் பொறுத்தவரை, எங்களைப் போன்ற அரசியல்வாதிகளால் குறிப்பாக தங்களை மன்னர்கள் போன்று நினைத்துக் கொள்பவர்களால்தான் நீங்கள் பெரும் இடையூறுகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை நான் அறிவேன். தங்களை முக்கிய பிரமுகர்கள் என்று நினைத்துக் கொள்பவர்களை, உங்களைப் போன்ற பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டால், அவர்களுக்கு மிகுந்த கோபம் வரும். அவர்கள் உங்களை அவமதிப்பார்கள். நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டவும் செய்வார்கள். நீங்கள், உங்களது கடமைகளைத்தான் செய்கிறீர்கள் என்று மன்னிப்புக்கோர முயற்சித்தாலும், அவர்கள் அதற்கு, மதிப்பளிப்பதில்லை. இதுதான் வி.ஐ.பி. கலாச்சாரம்.

சில நேரங்களில் இதுபோன்ற வி.ஐ.பி. கலாச்சாரம், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும். இதை சொல்வதற்கு எனக்கு துணிவு உள்ளது. ஏனெனில், நான் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறேன். இதுவே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நீங்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது எண்ணிக்கையை 15 லட்சமாக உயர்த்தினாலும் கூட, குடிமக்கள் ஒழுகத்தைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளித்தால் தவிர, உங்களது பணி கடினமானதாகத்தான் இருக்கும். எனவே, இந்த பொன்விழா ஆண்டில், இது போன்ற பெரிய அமைப்புகளின் முக்கியத்தவம் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம்.

மற்ற மத்தியப் படைகளை ஒப்பிடுகையில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படையின் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் நாட்டின் வலிமைக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி தருவார்கள் என்பது உறுதி. விமான நிலையங்கள் மற்றும்  மெட்ரோ ரயில் நிலையங்களில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் தோற்றம், வளர்ச்சி, விரிவாக்கம்  மற்றும் நீங்கள் பணியாற்றும் விதம் குறித்த டிஜிட்டல் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை என் மனதில் தோன்றியுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் எப்போதாவது ஒரு சில நேரத்திலாவது இவற்றை பார்க்க நேரிடும். அப்போது அவர்கள் நீங்கள் 24 மணி  நேரமும் உழைத்துக் கொண்டிருப்பதை உணர நேரிடும். அதன் பிறகு அவர்களிடம், உங்கள் மீது ஒது மரியாதை ஏற்பட்டு, பெருமிதம் கொள்வார்கள். எந்த ஒரு அம்சம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான், அது அதிக அளவிலான மக்களை சென்றடையும். இதுவே பாதுகாப்புப் படைகளுக்கு வலிமையாக இருக்கும்.

நாட்டின் அதி நவீன கட்டமைப்புகளான துறைமுகங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும்போது, அவற்றின் பாதுகாப்புக்கு நீங்கள்தான் பொறுப்பேற்கிறீர்கள்.

நண்பர்களே!

வலிமை வாய்ந்த இந்த படையில் பணியாற்றும் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படையினர், இந்திய மக்களுக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியாவிற்கு வந்து செல்லும் பயணிகளுக்கும் பாதுகாப்பை வழங்கி வருகிறீர்கள்.

 

 

நண்பர்களே!

விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் அனைவரும் தாங்கள் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். அர்ப்பணிப்பு மற்றும் விழிப்புடன் நீங்கள் ஆற்றிவரும் பணி காரணமாகத்தான் மக்கள் உங்களை நம்புகின்றனர்.

நண்பர்களே!

உயரிய நிலையை அடைந்துள்ள இந்த சிறப்பு மிக்க நன்னாளில், நாட்டை பாதுகாக்கும் பணியில், தங்களது உயிரைத் தியாகம் செய்த சகாக்களையும் நினைவு கூர்வது அவசியம். மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, மத்திய ரிசர்வ் காவல்படை அல்லது வேறு எந்த பாதுகாப்புப்படையாக இருந்தாலும், உங்களது அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தால் புதிய இந்தியாவை படைக்க முயற்சித்து வருகிறோம்.

இதுவரை, மத்திய காவல்படையைச் சேர்ந்த 4,000 தியாகிகள் உட்பட 35,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் ஈன்றுள்ளனர். அந்த தியாகிகள் அனைவருக்கும் எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

காக்கி சீருடையில் உள்ளவர்களுக்கும் அவர்களது கடின உழைப்புக்கும் நாட்டில் இதுவரை உரிய மரியாதையும், கவுரவமும் கிடைக்கப்பெறவில்லை என்ற பாதுகாப்புப் படையினரின் உணர்வுகளை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சாதாரண மக்களிடம் இந்தப் படைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, முதன்முறையாக நான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகுதான், செங்கோட்டையிலிருந்து உரையாற்றும்போது, 35,000-க்கும் மேற்பட்ட காவலர்களின் உயிர்த்தியாகம் உரிய முறையில் நினைவு கூறப்பட்டது.

நமது பாதுகாப்புப் படையினரின் பெருமை, மரியாதை மற்றும் கவுரவத்தை மென்மேலும் உயர்த்த வேண்டியது ஒரு நாட்டிற்கு அவசியம். அந்த வகையில்தான், காவலர்கள் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் இந்த நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு, நமக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எல்லை ஏதும் இல்லை. பயங்கரவாதம் என்பது 1,000 அல்லது 2,000 கிலோ மீட்டருக்கு மட்டும் உட்பட்டது அல்ல. உலகின் மூலை முடுக்கெல்லாம் பயங்கரவாதம் பரவியுள்ளது. இது மனித குலத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. எனவே, உங்களது பணிக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

நன்றிகள் பல!