பி.எம்.இந்தியா
விரைந்த நிர்வாகம் மற்றும் குறித்த நேரத்தில் முடிவுகள் என்பதற்காக தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பிரகதியின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று 11வது கலந்துரையாடலை நிகழ்த்தினார்.
பொது மக்களின் குறை தீர்ப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இதில் மேலும் விரைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், குறை தீர்ப்பு என்பது ஜனநாயகத்தில் ஒரு முக்கிய அம்சம் என்று குறிப்பிட்டார். அடுத்த ஒரு மாதத்தில், அனைத்து குறைகளும் 60 நாட்களில் தீர்க்கப்பட வேண்டும் என்றார் பிரதமர். மூத்த அதிகாரிகள் இதில் தலையிட்டு செயல்படுத்த வேண்டும் என்றார்.
சாலைப் போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், எண்ணை வளத் துறை, போன்ற துறைகளின் திட்டங்கள் மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
தொழில் தொடங்க ஏதுவான சூழல் குறித்து ஆய்வு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தற்போது மாநிலங்களில் தொழில் தொடங்குவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் முன்னேற்றம் ஏற்பட உறுதியோடு பணியாற்ற வேண்டும் என்றார் பிரதமர்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார். நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக ஆய்வு செய்த பிரதமர், அனைத்து நில ஆவணங்களையும் ஆதார் அட்டையோடு இணைக்க வேண்டும் என்றார். பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இது முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
குடிமக்களுக்கு மின்னணு முறையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர், மாவட்ட வாரியாக நாடு முழுவதும் எத்தனை சேவைகள் வழங்கப்படுகின்றன என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விதவைகள் ஓய்வூதியம், தொழுநோய் ஒழிப்பு போன்ற சமூக திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் பிரதமர் கேட்டறிந்தார்.
Today's PRAGATI session had extensive deliberations on how to give impetus to ease of doing business & further increase the momentum built.
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
Also discussed projects under @_DigitalIndia including digitisation of land records & integrating land records with Aadhaar at the earliest.
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
Issues pertaining to the social sector that were discussed included Widow Pension Programme & the progress towards eradication of leprosy.
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
Like always, infra projects were reviewed. Implementation of Fasal Bima Yojana also figured in today's session. https://t.co/PS0j8867QI
— Narendra Modi (@narendramodi) March 23, 2016