Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெண்களால் மட்டுமே இயக்கப்படும் டி.சி.எஸ். நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை பிரதமர் பார்வையிட்டார்.

பெண்களால் மட்டுமே இயக்கப்படும் டி.சி.எஸ். நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை பிரதமர் பார்வையிட்டார்.


ரியாத்தில் உள்ள பெண்களால் மட்டுமே இயக்கப்படும் டி.சி.எஸ். நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்.

அந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் பெண்களோடு உரையாடிய பிரதமரை அப்பெண்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சவுதி அரேபியாவுக்கே பெருமை சேர்க்கும் அவர்களோடு உரையாடுவதன் மூலம் உலகுக்கு ஒரு முக்கிய செய்தியை வலியுறுத்துவதாக கூறினார்.

இன்றைய போட்டிகள் மிகுந்த உலகில் முன்னேறுவதற்கு, இயற்கை சக்தி மற்றும் மனித சக்தி இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். பெண்களின் பங்கு அத்தகைய முயற்சியில் ஈடுபடும்போது, நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றார். இந்த மையத்தில் காணப்படும் உற்சாகம் உலகின் ஆக்கபூர்வமான சக்திக்கான அடையாளம் என்றார். அந்த மென்பொறியாளர்களை இந்தியாவுக்கு வரவேற்ற பிரதமர், அவர்களின் வருகை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்திய பிரதமர், இதனால் எளிதான நிர்வாகம், முழுமையான நிர்வாகம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தை வழங்க முடிகிறது என்றார்.

“நரேந்திர மோடி” என்ற செயலியை பயன்படுத்துமாறு அவர்களிடம் கூறிய பிரதமர், இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் பேசுமாறு கூறினார்.

அந்த இடத்தில் இருந்த தகவல் மையத்தில் “வந்தே மாதரம், மாத்ரி தேவோ பவ” என்று பிரதமர் எழுதினார்.