Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹரியானா உதயமான தினத்தில் பிரதமர் வாழ்த்து


ஹரியானா மாநிலம் உருவான தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1966-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

ஹரியானா மாநிலம் துணிச்சல், திறமை, இளமை ஆகியவற்றைக் கொண்டது என்றும், தொன்மை மற்றும் நவீன கலாச்சாரத்தின் கலவை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாநிலம் தொடர்ந்து முன்னேறி நாட்டு நலனுக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.