Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகாதாரம் மற்றும் மருந்து தயாரிப்புத் துறையில் இந்தியா – பிரேசில் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருந்து தயாரிப்புத் துறையில், இந்தியா – பிரேசில் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நவம்பர் 2019-ல் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலன்கள்:

இந்தியா – பிரேசில் இடையேயான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளிடையேயான கூட்டு முயற்சிக்கான ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துதல், சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்யும். இருநாட்டு மக்களின் பொது சுகாதார நிலையை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும் அத்துடன் இந்தியா – பிரேசில் இடையேயான இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்தும்.