Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புல்புல் புயல் நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு


புயல் சின்னம் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.11.2019) ஆய்வு செய்தார். புல்புல் புயல் நிலவரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியுடன் பேசிய அவர், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

புயல் சின்னம் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்தேன்.

புல்புல் புயல் நிலவரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுடன் பேசினேன். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளேன். அனைவரும் நலமாகவும், பத்திரமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன்.