Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷில்லாங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் அவர்களின் உரை

ஷில்லாங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் அவர்களின் உரை

ஷில்லாங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் அவர்களின் உரை



இந்த மேடைக்கு வருவதற்கு முன்பாக, வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்களின் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்பட்ட ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் மிகச் செறப்பாக இருந்தன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கும் அந்த சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை பாராட்டுகிறேன். அவர்களின் திறமையில் ஒரு பகுதியை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது.

சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசின் திட்டமான தீன் தயாள் அந்தோதயா யோஜனா மூலமாக பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. பல்வேறு சுய உதவிக் குழுக்கள் வடகிழக்கு பகுதி நிதி நிறுவனங்கள் மூலமாகவும், மத்திய அரசின் வடகிழக்கு வளர்ச்சித் துறையின் மூலமாகவும் பயனடைந்து வருகின்றன.

மத்திய அரசு, சுய உதவிக் குழுக்களை, குறிப்பாக பெண் சுய உதவிக் ழுழுக்களை வளர்க்க வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளது. டிசம்பர் 2015ல் வடகிழக்குப் பகுதிக்காக மத்திய அமைச்சரவை ஒரு சிறப்பு நிதித் தொகுப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் நோக்கம் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்களுக்கு 2023-24ம் ஆண்டுக்குள் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் பலன் வழங்க வேண்டும் என்பதே.

நண்பர்களே,

இன்று, ஒரு கால்பந்து மைதானத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளேன். வடகிழக்குப் பகுதி மக்கள், குறிப்பாக மேகாலயாவைச் சேர்ந்த மக்கள் கால்பந்தாட்டத்தை எப்படி விரும்புகிறார்கள் என்பதை நாம் அறிவோம். கால்பந்தாட்டம் இப்பகுதியில் மிகவும் நேசிக்கப்படுகிறது. இண்டு இடுக்குகளிலெல்லாம் கால்பந்தாட்டம் விளையாடப்படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர்களான யூஜென்சன் லிங்டோ, அஜ்பார் காங்ஜீ மற்றும் மார்லங்கி சூடிங் ஆகியவர்களை நாம் அறிவோம். சர்வதேச அரங்கங்களிலும், இந்திய சூப்பர் லீக் போட்டிகளிலும் விளையாடி நமது தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளார்கள்.

மேகாலயா அரசாங்கம், குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாடும் திறமைகளை கண்டறிந்து அக்குழந்தைகள் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாகுவதற்கு பயிற்சி அளிக்கிது என்று என்னிடம் கூறப்பட்டது. மத்திய வடகிழக்கு வளர்ச்சித் துறையோடு இணைந்து தற்போது கட்டப்பட உள்ள 38 கோடி ரூபாய் மதிப்பிலான கால்பந்தாட்ட அரங்கம் இந்த நோக்கத்தை நிறைவேற்ற பயன்படும் என்று நம்புகிறேன்.

அடுத்த ஆண்டு, 2017 இந்தியா 17 வயதுக்கு குறைவானவர்களுக்கான கால்பந்தாட்டத்தை நடத்த உள்ளது. இந்தியாவில் நடக்க உள்ள இந்த விளையாட்டுப் போட்டியின் பலன்களை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விளையாட்டு வடகிழக்குப் பகுதியில் மட்டும் அல்லாமல் நாடெங்கும் பரவ வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மேகாலயா அதிக எண்ணிக்கையிலான கால்பந்தாட்ட சங்கங்களை வைத்துள்ளது. உள்ளுரில், கால்பந்தாட்ட கிளப்புகளுக்கிடையேயும், இதர கால்பந்து அணிகளுக்குள்ளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெறுகையில் அதை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நண்பர்களே,

சிரபுஞ்சி பகுதி இந்தியாவிலேயே அதிகமாக மழை பெறும் பிரதேசம் என்பதை நாம் அறிவோம். அந்த இடத்துக்கு தற்போது மற்றொரு பெருமை சேர்ந்துள்ளது. சிரபுஞ்சி பகுதியில் டாப்லர் தட்பவெட்ப ரேடார் நிறுவப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு அறிவித்துக் கொள்கிறேன். பாரத் எலக்ட்ரானிக்ஸ், இந்திய வானிலை ஆராய்ச்சிக் கழகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்தவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அழகும் அனுபவமும் நிறைந்த இந்த வடகிழக்குப் பகுதி பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்து நிலச்சரிவுகளை சந்தித்துள்ளது.

தட்பவெட்ப மாற்றத்துக்கான ரேடார், வானிலையை முன்னதாகவே அனுமானித்து, வடகிழக்குப் பகுதி பலனடைவதற்கு உதவும். இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இது பெரும்வகையில் உதவி செய்யும்.

வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த கவுன்சில் கூட்டத்தில், மாநில ஆளுனர்கள் மற்றும் முதலமைச்சர்களோடு சேர்ந்து நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வடகிழக்குப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை என்னால் காண முடிந்தது. ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டி உள்ளது.

கிழக்குப் பகுதிக்கான செயல்திட்டதை அமலாக்குவதில் எனது அரசு தீவிரமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கு வடகிழக்குப் பகுதியே நுழைவாயிலாக உள்ளது. இந்தக் கொள்கையின் அடிப்படையில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான, சாலைகள், ரயில்வே, தொலைத் தொடர்பு, மின்சாரம் மற்றும் நீர்வழிப்பகுதிகள் ஆகியவற்றை உருவாக்குவது இந்த கொள்கையின் ஒரு பகுதி. இதன் ஒரு பகுதியாக இன்று மூன்று புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும், ரயில்வ மூலமாக வடகிழக்குப் பகுதியோடு இணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து வடகிழக்குப் பகுதியில் ரயில்வே போக்குவரத்தை வளர்ப்பதற்காக இது வரை 10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 5000 கோடி ரூபாயை வடகிழக்குப் பகுதி ரயில்வே முன்னேற்றத்துக்காக செலவிட, மத்திய ரயில்வே துறை தயாராக உள்ளது.

நவம்பர் 2014ல், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம் பெற்றது. சமீபத்தில், திரிபுராவில் உள்ள அகர்த்தலா அகண்ட ரயில்பாதையில் இணைக்கப்பட்டது. வடகிழக்குப் பகுதியின் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான தினம். அகண்ட ரயில்பாதை, மணிப்பூர் மற்றும் மிசோராம் மாநிலங்களை இணைக்கிறது. கவுகாத்தியில் உள்ள காமாக்யா, ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவியோடு ரயில் பாதை மூலமாக இணைகிறது.

சாலை மற்றும் ரயில்வே பாதைகளை நாம் நமது அண்டை நாடுகளோடு இணைக்க உள்ளோம். இது இப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

“தேசிய நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம்” என்ற ஒரு நிறுவனத்தை, வடகிழக்குப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை உருவாக்குவதற்கென்றே, கடந்த ஜுலை 2014ல் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம், பிரம்மபுத்ரா நதியின் குறுகேகே மூன்று புதிய பாலங்களை கட்ட உள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1,000 கிலோ மீட்டருக்கான நெடுஞ்சாலைகள் அமைய உள்ளன. வடகிழக்குப் பகுதி வளர்ச்சித் திட்டத்தின் மூலம், இப்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூர் நீர்பாதைகள் இந்த வளர்ச்சித் திட்டம் மூலமாக ஊக்கமமைடந்துள்ளன. வடகிழக்குப் பகுதியில் உள்ள 19 நீர்நிலைகளை, தேசிய நீர்நிலைகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களுக்கு 24 மணி நேரம் இடைவிடாத மின்சாரம் வழங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதை மனதில் வைத்து, மத்திய அரசு மின்சக்தித் துறையில் அதிகமான முதலீடுகளை செய்து வருகிறது. அனைத்து வடகிழக்க மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இரண்டு மின் திட்டங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிஷ்வநாத்- சரியாலி முதல் ஆக்ரா வரையிலான மின் பகிர்மாண இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் மின் வசதி இல்லாத 18,000 கிராமங்களில் இது வரை 7000 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் இந்தியாவில் மின்வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை

உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்.

அரசு 5300 கோடி ரூபாய் செலவில், ஒரு முழுமையான தொலைத் தொடர்புத் திட்டத்தை உருவாக்க உள்ளது. அகர்த்தலா நகரம், பங்களாதேஷோடு சர்வதேச இணைய இணைப்பில் இணைக்கப்பட்ட மூன்றாவது நகரமாகும். இது தொலைத் தொடர்புத் துறையை வளர்ப்பதோடு, இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

கேங்டாக் நகருக்கு நான் சென்ற முறை வருகை தந்தபோது, இந்தியாவிலேயே இயற்கை விவசாயத்துக்கான முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது. வடகிழக்குப் பகுதியில் உள்ள இதர மாநிலங்கள் சிக்கிம் மாநிலத்தை பின்பற்ற வேண்டும். இந்தியாவின் இயற்கை விவசாயத்துக்கான களமாக வடகிழக்குப் பகுதி உருவாகும் தகுதி படைத்தது. இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்.

நண்பர்களே,

தற்போது ஒரு கடன் வாங்குவதற்கு, வங்கி அதிகாரிகள் எழுப்பும் சிக்கலான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை. மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ், தொழில முனைவோருக்கு காப்புறுதி இல்லலாத கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2015-16ம் ஆண்டில், மூன்று கோடியே நாற்பத்து எட்டு லட்சம் பயனாளர்களுக்கு ஒரு லட்சம் நாற்பத்து ஏழு கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு லட்சம் கடன்கள் வடகிழக்குப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2800 கோடி ரூபாய்.

இதே போல பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 93 லட்சம் வங்கிக் கணக்குகள் இப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளன. 21 லட்சம் பயனாளர்கள், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனாவில் இணைந்துள்ளனர் 19 லட்சம் பயனாளர்கள், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவில் இணைந்துள்ளனர்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இத்துறையிலேயே ஆயத்த ஆடைகள் துறை அதிக வேலை வாய்ப்பு வழங்குகிறது. இத்துறையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர்.

வடகிழக்குப் பகுதியில் தொழில் நடவடிக்கை மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க ஆயத்த ஆடைகள் உருவாக்கும் மையம் எட்டு மாநிலங்களில் 145 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது. இந்த எட்டு மையங்களில் ஏழு மையங்களின் பணி முடிவடைந்து விட்டது. இந்த மையங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று பிரிவுகள் உள்ளன.

நண்பர்களே,

மேகாலயா மாநிலம், ஒரு பிரத்யேகமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் இன குணநலன்களை கொண்டுள்ளது. இது இயற்கை எழிலாலும் வன விலங்குகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மேகாலாயாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு, சாலை இணைப்புள், ஹோட்டல்கள் மற்றும் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு நாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மத்திய அரசு, “ஸ்வதேஷ் தர்ஷன்” என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலாவை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதில் ஒரு பகுதி வடகிழக்கு மாகாணங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால், 2 அக்டோபர் 2014ல் மத்திய அரசு, தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 2019க்குள் தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தது. 15 ஆகஸ்ட் 2014 முதல் 15 ஆகஸ்ட் 2015 வரையிலான காலத்துக்குள், ஸ்வச் பாரத் – ஸ்வச் வித்யாலயா திட்டத்தின் மூலமாக நாலு லட்சத்து 17 ஆயிரம் கழிவறைகளை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கட்டி முடித்துள்ளோம்.

தூய்மை இந்தியா திட்டம், பொது தூய்மைக்கான ஒரு திட்டம். இத்திட்டத்தால் அதிக பயனடைபவர்கள், ஏழைகளிலும் ஏழைகளான மக்கள். திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதை தவிர்த்து, ஒரு தூய்மையான இந்தியாவை உருவாக்க நீங்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தூய்மை இந்தியா திட்டத்தின் காரணமாக, இப்பகுதியில் சுகாதாரத்துக்கும் தூய்மைக்கும் ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக கொள்கிறேன். மேகாலயாவின் தூய்மையான கிராமமான மால்யோங் கிராமம், கேங்டாக் உள்ளிட்ட சிக்கிம் மாநிலம் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடமாக மாறியுள்ளது.

“வடகிழக்கு வழிகாட்டுகிறது – ஸ்வச் பாரத் அபியான்” திட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்த வடகிழக்கு கவுன்சிலுக்கும் எனது வாழ்த்துக்கள். வடகிழக்குப் பகுதியிலேயே தூய்மையான நகராக உருவெடுத்துள்ள கேங்டாக் நகருக்கு எனது வாழ்த்துக்கள்.

வடகிழக்கு மாகாணங்களுக்கான கவுன்சிலின் பேரவைக் கூட்டத்தை ஷில்லாங்கில் நடத்தியதற்காக மேகாலயா மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு கலந்துரையாட வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஜெய் ஹிந்த்.

***