பி.எம்.இந்தியா
உஸ்பெகிஸ்தானின் தலைநகரமான தாஷ்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் (எஸ்.சி.ஒ.) இன்று பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இணைந்ததை வரவேற்ற அதிபர் ஜி ஜின்பிங் இதனால் எஸ்.சி.ஒ. மேலும் வலுவடையும் என்றார். இந்தியா எஸ்.சி.ஒ.-வில் உறுப்பினராக சேர ஒத்துழைப்பு அளித்ததற்காக பிரதமர் மோடி அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக சியோலில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தை பற்றி பிரதமர் எடுத்துரைத்தார்.
என்.எஸ்.ஜி-யில் இணைவதற்கான இந்தியா கொடுத்துள்ள விண்ணப்பத்தை நியாயமாகவும் வெளிப்படையாகவும் மதிப்பீடு செய்து சீனா முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சியோல் கூட்டத்தில் பெருகிவரும் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு சீனாவும் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
Uzbekistan: PM @narendramodi and President Xi Jinping meet. pic.twitter.com/cxj9JfD0z5
— PMO India (@PMOIndia) June 23, 2016
Met President Xi Jinping. pic.twitter.com/FNjaqmJM9O
— Narendra Modi (@narendramodi) June 23, 2016