Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜ்கோட் மருத்துவமனை தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, ராஜ்கோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த துயருற்றேன். இந்த மோசமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட இடத்தில் அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

 

 

***