Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜேந்திரா மத்திய வேளாண் பல்கலைக்கழகம் என்ற பெயரை டாக்டர் ராஜேந்திரபிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் என் மாற்றுவதற்கான அதிகாரப்பூர்வ திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ராஜேந்திரா மத்திய வேளாண் பல்கலைக்கழகம் என்ற பெயரை டாக்டர் ராஜேந்திரபிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் என் மாற்றுவதற்கான அதிகாரப்பூர்வ திருத்த மசோதாவுக்கு உண்மைநிலை அடிப்படை பின்னேற்பு ஒப்புதல் அளித்தது.

வேளாண்மை மற்கும் அது சார்ந்த விஞ்ஞானத்தில் கற்பித்தல் சிறப்பு நிலை அடைதல், கற்றுப் பயிற்சி பெற்ற மனித ஆற்றல் உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பூசாவில் டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் நுட்பத் திறன்பெற்ற மனித ஆற்றல் குறைபாட்டை நிவர்த்திக்கவும் அடிப்படை வசதியை மேம்படுத்தவும் கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பங்களிக்கவும் உதவும். தற்போதுள்ள கல்லூரிகள் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை வழங்கி இந்த மண்டலத்தில் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் உறுதுணையாக இருக்கும்.