Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மொசாம்பிக் நாடுகளுக்கிடையேயான விமானச் சேவை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கிடையேயான விமான சேவை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்சமயம் இந்தியா-மொசாம்பிக் நாடுகளுக்கிடையே எந்தவிதமான விமானசேவை ஒப்பந்தமும் இல்லை. இரு நாடுகளுக்கிடையேயான விமானத் தொடர்பை ஊக்குவிப்பதற்காக, இருதரப்பும் 2011ஆம் ஆண்டு ஆலோசனைகளை துவங்கி விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறார்கள்.

நிதி அமைச்சகம் (வருமானத் துறை/ பொருளாதார துறை), வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நீதித்துறை அமைச்சகங்களின் ஆலோசனைகளின் பேரில் விமான சேவை ஒப்பந்தத்தின் வரைவு இறுதிசெய்யப்பட்டது. அதன் முக்கியக்கூறுகள் வருமாறு,

அ) இருதரப்புக்கும் என தனித்தனியாக பல விமான சேவை நிறுவனங்களை அமைத்துக்கொள்ளல்.

ஆ) ஒரு நாட்டைச் சேர்ந்த விமானச்சேவை நிறுவனங்கள், அந்த நாட்டின் பிற நிறுவனங்களுடனோ, இன்னொரு நாட்டின் விமானச் சேவை நிறுவனத்துடனோ, அல்லது மூன்றாவதாக ஏதேனும் ஒரு விமானச் சேவை நிறுவனத்துடனோ இணைந்து தங்கள் சேவையை சந்தைப்படுத்தலாம்.

இ) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு நாட்டைச் சேர்ந்த விமானச் சேவை நிறுவனம் இன்னொரு நாட்டில் தனது அலுவலகத்தை அமைத்துக்கொண்டு விளம்பரம் மற்றும் விமானச் சேவை விற்பனையில் ஈடுபடலாம்.

ஈ) இருநாடுகளைச் சேர்ந்த விமானச்சேவை நிறுவனங்களுக்கும் இருநாடுகளுக்கும் இடையிலான விமானவழித்தடத்தை சம அளவில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

உ) மேலும் இந்திய விமானச்சேவை விதிகளுக்கு உட்பட்டு, செயல்படுவதற்கான உரிமை, ஒப்புக்கொண்ட சேவைகளை நிர்வகிக்கும் விதிகள், வணிக வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் காவல் சம்பந்தப்பட்ட விதிகள் ஆகியற்றை ரத்துசெய்வதற்கான ஏற்பாடுகளும் ஒப்பந்தத்தில் உள்ளது.