Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்குதலால் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்


உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கி சிலர் உயிரிழந்திருப்பது குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது “ `உத்தரப்பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கி சிலர் உயிரிழந்திருப்பது மனதை வருத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்பை எதிர்கொள்ள இறைவன் அவர்களுக்கு ஆற்றல் அளிக்கப்பட்டும்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, மின்னல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்”.

*****