பி.எம்.இந்தியா
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிவுரைக்கு ஏற்ப மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) ஆந்திரா மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த வகுப்புகள், சமுதாயத்தினர் பெயரை சேர்த்தல் மற்றம் நீக்குதல், உரிய திருத்தம் ஆகியவற்றை செய்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமான என்.சி.பி ஆந்திர மாநிலத்தில் 35 திருத்தங்களை செய்துகொள்ள பரிந்துரைத்துள்ளது. தெலுங்கானாவில் 86 புதிய சேர்க்கைகளுக்கு பரிந்துரைத்துள்ளது. புதிதாக ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்கப்படும் வகுப்பினருக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பிலும், மத்திய பல்கலைக்கழக படிப்புகளிலும் உரிய இட ஒதுக்கீடு ஏற்கெனவே உள்ள பரிந்துரை படி கிடைக்கும். அத்துடன் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது மத்திய அரசு வழங்கி வரும் சலுகைகள், படிப்பு உதவித்தொகை, மற்றும் இதரபல நலத்திட்ட பலன்களும் கிடைக்கும்.
பின்னணி:
என்.சி.பி பரிந்துரைபடி 24 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் சாதிகள் துணைபிரிவுகள், உள்பட மொத்தம் 2ஆயிரத்து 401 பதிவுகள் செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. கடைசியாக கடந்த 26-05-2016ல் வெளியிடப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள ஓ.பி.சி. பட்டியலில் புதிய சேர்க்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
என்.சி.பி.சி. சட்டவிதி 9 ன் கீழ் செய்யப்படும் வகுப்பினர் இணைப்பு நீக்கல் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது.