Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பிரதமர் ஆய்வு செய்தார்


லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு செய்தார். “பணிகள் நிறைவடைந்ததும், இந்த வளாகம் உலகின் மிகப்பெரிய கடல்சார் அருங்காட்சியமாக விளங்கும். சுற்றுலா, ஆராய்ச்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாக விளங்குவதுடன், இந்தியாவின் பழங்கால கடல்சார் பாரம்பரியங்களையும் இது காட்சிப்படுத்தும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியதாவது:

லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தேன். பணிகள் நிறைவடைந்ததும், இந்த வளாகம் உலகின் மிகப்பெரிய கடல்சார் அருங்காட்சியமாக விளங்கும். சுற்றுலா, ஆராய்ச்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாக விளங்குவதுடன், இந்தியாவின் பழங்கால கடல்சார் பாரம்பரியங்களையும் இது காட்சிப்படுத்தும்.”

***

(Release ID: 2169086)

AD/RB/RJ