பி.எம்.இந்தியா
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கோட்டேஷ்வர் சாலை முதல் விமான நிலையம் வரையில், 6.032 கி.மீ நீளமுள்ள வழித்தடத்தையும், 5 ரயில் நிலையங்களையும் (இதில் 4 உயர்மட்ட பாலம், பூமிக்கடியில் 1 நிலையம்) உள்ளடக்கியுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, அகமதாபாத்–காந்திநகர் இடையே, மொத்தம் 77.63 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டிற்கு வரும். இந்த வழித்தடத்தில், ஆசிரமம் சாலை, கோட்டேஷ்வர் பிராச்சின் மந்திர், சபர்மதி நதி, சர்தார் நகர், விமான நிலையம் ஆகிய ரயில் நிலையங்கள் அமையவுள்ள. இத்திட்டப் பணிகளுக்கான கட்டுமானக் கடன் தொகைக்கான, வட்டி உட்பட, இத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கான மொத்தச் செலவு ரூ.2,169.04 கோடியாகும்.
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம்–ஏ திட்டப் பணிகள், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது. இது நகரின் மெட்ரோ ரயில் வழித்தடக் கட்டமைப்பின் முக்கிய விரிவாக்கப் பணியாக அமைகிறது.
இத்திட்டத்தின் கீழ், 6.032 கி.மீ நீளமுள்ள புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இது விமான நிலையத்திற்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குவது, போக்குவரத்து வசதிகள் இல்லாத முக்கிய குடியிருப்பு, வணிகப் பகுதிகளை இணைப்பது, பொதுப் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்த உதவிடும்.
குடியிருப்பு, வணிக மையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அகமதாபாத்–காந்திநகர் வழித்தடத்துடன் தடையின்றி இணைப்பதை இக்கட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 2029 உலக காவல்துறை விளையாட்டுப் போட்டிகள், 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக இப்பகுதியில், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271056®=3&lang=1
***
TV/SV/RJ