Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மாநாடு – பிரதமர் பங்கேற்பு

அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மாநாடு – பிரதமர் பங்கேற்பு

அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மாநாடு – பிரதமர் பங்கேற்பு


வித்யா பாரதி அகில இந்திய கல்வி அமைப்பு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வித்யா பாரதியின் “விழுமங்களுடன் கூடிய கல்வி” என்ற அடையாளத்தை மேலும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார். ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் வகையில் முதல்வர்கள் செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு ஒலிம்பிக்ஸ் 2020-ல் தங்கப் பதக்கங்களை வெல்லும் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தூய்மை (தூய்மையான இந்தியா) மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் நல்ல மாற்றங்களை கொண்டுவரும் வகையில் வித்யா பாரதி பள்ளியின் மாணவர்கள் செயல்பட வேண்டும். எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாட்டால் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கூறிய பிரதமர் வித்யா பாரதி பள்ளிகள் இதனை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கல்வியின் அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பத்தை கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய பிரதமர் இதன் பலனை முழுமையாக அடையும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். உதாரணத்திற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வித்யா பாரதி பள்ளிகளின் ஊக்குவிக்கும் கதைகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்று கூறினார்.

இந்நிகழ்வில் கூடியிருந்த பள்ளி முதல்வர்களை நல்ல மாற்றங்களையும் நல்ல சக்தியையும் கொண்டுவரும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.