Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடலாஜில் மார்ச் 4 அன்று தங்கும் விடுதி மற்றும் கல்விக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

அடலாஜில் மார்ச் 4 அன்று தங்கும் விடுதி மற்றும் கல்விக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

அடலாஜில் மார்ச் 4 அன்று தங்கும் விடுதி மற்றும் கல்விக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

அடலாஜில் மார்ச் 4 அன்று தங்கும் விடுதி மற்றும் கல்விக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


இந்தியத் தாயே! வெற்றி உனக்கு!

இந்தியத் தாயே! வெற்றி உனக்கு!

இந்தியத் தாயே! வெற்றி உனக்கு!

பெருந்திரளாக இங்கே இன்று கூடியிருக்கும் மதிப்புக்குரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்தப் புனிதமான தருணத்தில் உங்களிடையே பங்கேற்கவும், உங்களின் வாழ்த்துகளைப் பெறுவதற்கும் நான் அழைக்கப்பட்டிருப்பது எனது அதிர்ஷ்டமாகும்.

இன்று அன்னபூர்ணா ஆலயத்தில் நடைபெறும் அன்னை அன்னபூர்ணாவின் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நாம் சமூகத்திற்கான புதிய திசையைப் பற்றி சிந்திக்கலாம். எல்லாக் கோவில்களிலும் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால், அன்னபூர்ணா ஆலயத்தில் தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் பாரம்பரியத்தை நாம் மாற்றியமைக்கலாம். இந்த சமூகம் அன்னை பூமியோடு தொடர்புடையது. எனவே, ஒவ்வொரு பக்தருக்கும் சிறிய மரக்கன்றினைப் பிரசாதமாக வழங்க நிர்வாகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். பக்தர்கள் இந்த மரக்கன்றை தங்களின் வீட்டில் வளர்க்குமாறும் நான் வேண்டுகிறேன். இதன் மூலம் பக்தர்களின் வீட்டின் முன் அல்லது அவர்களது நிலத்தின் மூலையில், அன்னை அன்னபூர்ணாவின் பிரசாதம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அன்னை அன்னபூர்ணாவின் பிரசாதத்தை அவர்கள் எப்போதும் பாதுகாப்பார்கள்.

இந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுமா இல்லையா? மரக்கன்றுகள் எனும் பிரசாதத்தின் மூலம் மனிதகுல சேவைக்கும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் பல பணிகளை நாம் செய்யலாம். இன்னொரு செயலையும் நாம் செய்யலாம். லீவா பட்டேல் சமாஜத்தில் பெண் குழந்தை பிறக்கும் போது அந்தக் குழந்தையை அன்னை அன்னபூர்ணாவின் ஆசிக்காக அன்னை அன்னபூர்ணா கோவிலுக்குக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு ஐந்து மரக்கன்றுகள் தரப்பட வேண்டும். இந்த மரக்கன்றுகள் மரத்தை உற்பத்தி செய்யும். சாத்தியப்பட்டால், அரசோடு விவாதித்தப்பின், இந்த அறக்கட்டளைக்கு 100-லிருந்து 200 ஏக்கர் வரை தரிசு நிலத்தைக் கேட்டுப்பெறலாம். அந்த நிலத்தில் பெண் குழந்தையின் குடும்பத்தினர் ஐந்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கலாம். பெண் குழந்தைக்கு 20 வயதாகும் போது மரக்கன்றுகளால் வளர்ந்த மரங்களைச் சந்தையில் விற்கலாம். இதன் மூலம் கிடைக்கும் தொகையை அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கலாம். இந்தத் தொகை அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு உதவும். இந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கடன் வாங்க வேண்டுமா? அரசு நிலம் அளிப்பதால், பெண்ணின் குடும்பத்தினர் மரக்கன்றுகளை வளர்க்க முடியும். இதற்கு நீங்கள் ஏற்பாடு செய்தால், ஒட்டு மொத்த நிலமும் பசுமையாகிவிடும்.

தற்போது நாம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வெளிநாட்டிலிருந்து மரங்களை இறக்குமதி செய்கிறோம். பெண் குழந்தைகள் வளரும் போது, மரக்கன்றுகளும் வளரும். இதன்மூலம் மரங்கள் இறக்குமதி நிறுத்தப்படும். நவீன வழியில் சமயப் பாரம்பரியங்களை, பொருளாதார நடைமுறைகளோடு நாம் தொடர்புப்படுத்தலாம்.

தானிங்களைத் தங்கமாக்கும் வல்லமைப் பெற்ற விவசாயிகளுடன் இன்று நான் பங்கேற்றுள்ளேன். ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்‘ என்பவை ஆழமான பொருள் கொண்டவை. விவசாயிகளின் சக்தி உணவுப் பாதுகாப்பை அளிக்கிறது. ராணுவ வீரர்களின் சக்தி நாட்டின் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கிறது. இவர்களின் சக்தி நாட்டின் வளர்ச்சி வாய்ப்பை எப்போதும் வெற்றிகரமாக்குகிறது. உங்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்காக மீண்டும் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அன்னை அன்னபூர்ணாவின் பாதங்களில் என்னை நானே சமர்ப்பித்துக் கொண்டு, உங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகப் பிரார்த்திக்கிறேன். இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி.