Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திரமோடி அஞ்சலி

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திரமோடி அஞ்சலி


முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’  பகுதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி  இன்று அஞ்சலி செலுத்தினார். அடல் அவர்களின் வாழ்க்கை பொதுச் சேவைக்கும் நாட்டுச் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது என்றும், அவர் எப்போதும் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பார் என்றும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“முன்னாள் பிரதமர் மதிப்புக்குரிய அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் கிடைத்தது. பொதுச் சேவைக்கும் நாட்டுச் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாக அமையும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208388&reg=3&lang=1           

***

AD/VK/RK