பி.எம்.இந்தியா
அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தைத் தொடர பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளிக்கூட நிலையில், பெருமளவு இந்த இயக்கம் வெற்றியடைந்திருப்பதால், 10,000 பள்ளிகளில் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை விரிவுபடுத்த 2019-20 வரை ரூ.1000 கோடி தொடர் செலவினத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
10,000-க்கும் அதிகமான பள்ளிகளில் அடல் டிங்கரிங் சோதனைக் கூடத் திட்டம், 2020-க்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50-60 புதுமை தொழில்கள் ஆதரவுடன் நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான அடல் இன்குபேஷன் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
100-க்கும் அதிகமான புதுமைத் தொழில் முயற்சி செய்வோர் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உதவி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****