பி.எம்.இந்தியா
24 டிசம்பர் அன்று ரஷ்யாவில் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அபிநந்தன் மற்றும் அபிவ்யக்தி என்ற இரு கலை நிகழ்ச்சிகள் மூலமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபிநந்தன் இந்திய நடன வடிவங்களை (பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற) ரஷ்ய கலைஞர்கள் அரங்கேற்றும் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி, இரு நாட்டு கலாச்சார புரிதல்களையும், ரஷ்யாவில் இந்திய கலாச்சாரத்துக்கு உள்ள புகழையும் எடுத்துக் காட்டுகிறது. இந்திய கலைகளை ரஷ்ய கலைஞர்கள் கற்றுத் தேர்ந்துள்ளதை உணர்த்தும் விதமாக அபிநந்தன் அரங்கேற்றப்படுகிறது. அபிநந்தன் நடனத்தில் முதலில் சுலோகம் படிக்கப்படும். பின்னர், ரஷ்ய பிரம்மகுமாரிகளால், வந்தே மாதரம் இசைக்கப்படும். அதைத் தொடர்ந்து, குச்சிப்புடி, கதக் மற்றும் டாண்டியா நடனங்களின் அரங்கேற்றம் இடம்பெறும். நிகழ்ச்சியின் இறுதியாக அனைத்துக் கலைஞர்களும் மேடைக்கு வந்து, அடல் பிகாரி வாஜ்பாய் இயற்றி லதா மங்கேஷ்கர் பாடிய பாடலான “கீத் நயா காத்தா ஹுன்” என்ற பாடலுக்கு வாத்திய இசை இசைப்பதோடு அந்நிகழ்ச்சி நிறைவு பெறும். “அபிநந்தன்” நடன நிகழ்ச்சியில் 52 கலைஞர்கள் பங்கு பெற்றனர். அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது அதன் சிறப்பம்சமாகும்.
“அபிவ்யக்தி” நடன நிகழ்ச்சி இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்திய ஆதரவாளர்களின் மனங்களில் உள்ள இந்திய பாரம்பரியங்களை கலை வடிவத்தில் ரஷ்ய கலைஞர்கள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகும். இந்திய மற்றும் ரஷ்ய மக்களிடையே நிலவும் நல்லுறவை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி இது. “அபிவ்யக்தி” நிகழ்ச்சி, நல்லெண்ணம், உற்சாகம், மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, உலகோடு நமக்கு உள்ள உறவை பிரதிபலிக்கும் நமது தத்துவமான “வசுதைவக் குடும்பகத்தை” எடுத்துரைப்பதாகும். 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள், நமஸ்காரம், சாரிஷ்னு, பரதநாட்டியம், ருத்ரா, பண்டாட்டம், கோரியா, லாவணி, கலினா தாள் போன்றவற்றை அரங்கேற்றும் நிகழ்ச்சியாக “அபிவ்யக்தி” அமையும்.
In a unique gesture, Russian artists will display Indian art forms in 2 programmes to welcome PM @narendramodi https://t.co/qOW9nxyLSf
— PMO India (@PMOIndia) December 23, 2015
The cultural shows will display the popularity of Indian cultural traditions in Russia and the importance of inter-cultural understanding.
— PMO India (@PMOIndia) December 23, 2015
Artists will perform musical enactment of Atal ji's poem 'Geet Naya Gata Hoon' rendered by Lata Mangeshkar on the eve of Atal ji's birthday.
— PMO India (@PMOIndia) December 23, 2015