பி.எம்.இந்தியா
அமெரிக்காவின் நிதித்துறை தலைமை செயல் அலுவலகர்களுடன் பிரதமர் திரு நரேந்தியமோடி இன்று முக்கிய சந்திப்பை நிகழ்த்தினார்.
ஜே.பி. மோர்கனின் தலைவர் ஜேமி டிமோன், ப்ளாக் ஸ்டோன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்டீவ் ஸ்க்வார்ஸ்மேன், வார்பர்க் பின்கஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹென்ரி க்ரேவிஸ், ஜெனரல் அட்லான்டிக் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அலுவலர் பில் ஃபோர்டு, ஏஐஜி இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹேன்காக், டைகர் க்ளோபல் நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் நிறுவனர் சேஸ் கோல்மேன், நியூயார்க் ஸ்டேட் ரிட்டயர்மென்ட் பண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விக்கி ஃபுல்லர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நடைபெறும் பணிகள் ஆகியவற்றுக்கும், இந்தியாவில் தொழில் தொடங்க உருவாகியுள்ள ஏதுவான சூழல் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தியாவில் தொடங்கப்பட்டு வரும் புதிய தொழில்கள் குறித்து ஆர்வம் தெரிவித்த அவர்கள், அத்தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தியாவில் இன்னமும் நிலவி வரும், அரசு நிர்வாக அமைப்பு காரணமாக ஏற்படும் தடைகள் மற்றும் வரி விதிப்பு குறித்து, அந்த தலைமை அதிகாரிகள் சிலர் கவலை தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளில் புதிய தொழில் முதலீட்டை வரவேற்பதாக கூறிய பிரதமர் மோடி, “தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா” என்ற தனது தொலை நோக்குத் திட்டம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றோடு தற்போது தொடங்கப்பட்டு வரும் நிறுவனங்கள் குறித்தும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அத்துறையை தனித் தொழில் துறை என்று குறிப்பிட்டார். புதிய கண்டுபிடிப்புகளும், புதிதாக தொடங்கப்படும் தொழில்களும், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் அடிநாதமாக விளங்குகின்றன என்றும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனைத்து தலைமை செயல் அலுவலர்களும், இந்தியாவின் மீது நம்பிக்கை தெரிவித்ததோடு, இந்தியாவில் தொழில் நடத்தும் சாத்தியக் கூறுகள் குறித்தும் பேசியது குறித்து, திருப்தி தெரிவித்தார் பிரதமர் மோடி.
கடந்த 15 மாதங்களில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பேசினார் மோடி. உலகில் நிலவும் மந்தமான பொருளாதார நிலைமையைப் போல அல்லாமல், இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இது தொழில் முனைவோருக்கு இந்தியா மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை என்று கூறினார்.
இந்தியாவில் தொழில் நடத்துவதில் உள்ள நல்ல அம்சங்களை உலக வங்கி குறிப்பிட்டிருப்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இதில் பல நாடுகளுக்கிடையே உள்ள ஆரோக்கியமான போட்டியையும் குறிப்பிட்டார். சமையல் எரிவாயுவில் நேரடி மானியம் வழங்கும் திட்டம், உலகிலேயே மிகப்பெரிய திட்டமாக உருவாகியுள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டார். காப்பீடு, ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில், நேரடி அந்நிய முதலீடு செய்வதற்கு ஏதுவான சூழல் ஏற்படுத்தப் பட்டிருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாய துறைக்கான காப்பீடு மற்றும் சுகாதாரத் துறையில் போல சில குறிப்பிட்ட துறைகளில் புதிய முன்னேற்றங்களை அமல்படுத்துவதற்கு ஏராளமான வாய்புகள் உருவாகியுள்ளதை சுட்டிக் காட்டினார். பாதுகாப்புத் துறை, மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறை, மறுசுழற்சி எரிசக்தித் துறை, ரயில்வே மற்றும் சுத்தமான இந்தியா மற்றும் மின்னணு இந்தியா ஆகிய துறைகளில் முதலீட்டுக்கான அற்புதமான வாய்ப்புகள் உருவாகியிருப்பதை மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். சுத்தமான இந்தியா மற்றும் மின்னணு இந்தியா ஆகியவற்றில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். 2022ம் ஆண்டுக்குள் 50 மில்லியன் புதிய வீடுகள், 6 லட்சம் வீடுகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு, ரயில்வேயின் கொள்ளளவு இரட்டிப்பாக்குதல், 175 ஜிகாவாட் புதுப்பிக்கப்படும் எரிசக்தி ஆகியவை இந்த அரசின் திட்டங்கள் என்று குறிப்பிட்ட மோடி, இத்துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
It's business first...PM @narendramodi at a roundtable on the financial sector in New York. pic.twitter.com/uTCUQgPnte
— PMO India (@PMOIndia) September 24, 2015
Roundtable with Financial Sector CEOs was a fruitful exchange of views on economic issues. Urged CEOs to invest in India in various sectors.
— Narendra Modi (@narendramodi) September 24, 2015
Highlighted steps taken by Govt. to improve business environment in India & how this translated into increased FDI & investor confidence.
— Narendra Modi (@narendramodi) September 24, 2015
CEOs were very interested in India's start-up sector. They appreciated steps taken by Govt. to make business easier. http://t.co/3pvqwaYG89
— Narendra Modi (@narendramodi) September 24, 2015
More discussions on business, investment and the economy during the interaction with leading CEOs. pic.twitter.com/smRcFePhVA
— PMO India (@PMOIndia) September 25, 2015
My meetings continued with world leaders, business persons & media CEOs. Here are some photos. pic.twitter.com/eNREDqTD5P
— Narendra Modi (@narendramodi) September 25, 2015
My interaction with Fortune 500 CEOs was on investment opportunities in India & why they must come & @makeinindia! pic.twitter.com/XVK18jbjuC
— NarendraModi(@narendramodi) September 25, 2015