பி.எம்.இந்தியா
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றமைக்காக திரு. டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
“அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு பெற்றமைக்காக திரு. டொனால்ட் டிரம்ப் அவர்களே உங்களுக்கு வாழ்த்துகள்.
உங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது இந்தியா மீது தாங்கள் காட்டிய நட்புணர்விற்காக நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லவதற்காக உங்களுடன் நெருங்கி பணியாற்ற நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்” என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations @realDonaldTrump on being elected as the 45th US President.
— Narendra Modi (@narendramodi) 9 November 2016
We appreciate the friendship you have articulated towards India during your campaign, @realDonaldTrump.
— Narendra Modi (@narendramodi) 9 November 2016
We look forward to working with you closely to take India-US bilateral ties to a new height. @realDonaldTrump
— Narendra Modi (@narendramodi) 9 November 2016