Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமைதிக்காக விண்வெளியின் பயன்பாடு மற்றும் ஆய்வு குறித்த ஒத்துழைப்பிற்கென இந்தியாவிற்கும், சாவோ டோம் மற்றும் பிரின்சீப்பிற்கு இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் விவரங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன


          அமைதிக்காக விண்வெளியின் பயன்பாடு மற்றும் ஆய்வு குறித்த ஒத்துழைப்பிற்கென இந்தியாவிற்கும், சாவோ டோம் மற்றும் பிரின்சீப்பிற்கும் இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் விவரங்கள், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன, இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று புதுதில்லியில் கையெழுத்தானது.  

முக்கிய கூறுகள்:    

  1. இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தம் புவி மண்டலத்தின் தொலைதூர உணர்வு, செயற்கைக் கோள் தகவல்; செயற்கைக் கோள் ஊடுருவல், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் செயலாக்கத்திற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்வதற்கு உதவிடும்;
  2. இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தம் மனித சமுதாயத்தின் நலனுக்கென விண்வெளி தொழில்நுட்பத் துறையில் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்திடவும் உதவி செய்யும். எனவே, இருநாடுகளின் அனைத்துப் பகுதிகளும் இதனால் பயன்பெறும்.