பி.எம்.இந்தியா
அமைதிக்காக விண்வெளி ஆய்வு மற்றும் கண்டறிதல்களைப் பயன்படுத்துவதற்காக இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் அக்டோபர் 1, 2018 அன்று புது தில்லியில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, விண்வெளித் துறையில் பல்வேறு புதிய ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுவர வழிவகுக்கும்.
*****