பி.எம்.இந்தியா
23 செப்டம்பர் 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி, அயர்லாந்துக்கு விஜயம் செய்து, அயர்லாந்து நாட்டு பிரதமர் என்டா கென்னியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அயர்லாந்து விமான நிலையத்தில், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் லியோ வராத்கர் அவர்களால் பிரதமர் மோடி வரவேற்கப்பட்டார்.
பின்னர் அயர்லாந்து டப்ளின் நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அயர்லாந்து பிரதமர் என்டா கன்னி வரவேற்றார்.
அயர்லாந்தில் இருந்து இந்தியாவில் பணியாற்றிய தாமஸ் ஓல்டாம் மற்றும் ஜார்ஜ் ஆப்ரகாம் க்ரியர்சன் ஆகியோர் தொடர்பான வரலாற்று ஆவணங்களை அவர்கள் பணிகளை நினைவு கூறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, அயர்லாந்து பிரதமரிடம் ஒப்படைத்தார்
அயர்லாந்து பிரதமர், நமது பிரதமரிடம், அயர்லாந்து கிரிக்கெட் ஜெர்சி மற்றும் எரியும் கருவிகளை பரிசளித்தார். அயர்லாந்தில் இந்த விளையாட்டுக்கள் முக்கியமான விளையாட்டுக்கள் ஆகும். அயர்லாந்து பிரதமர் அலுவலகத்தில் அமைந்துள்ள வருகையாளர் பதிவேட்டில், பிரதமர் மோடி தன் கருத்துக்களை பதிவு செய்து கையெழுத்திட்டார்.
இந்தியப் பிரதமருககு அளிக்கப்படட மதிய விருந்தின் போது பேசிய அயல்லாந்து பிரதமர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் அயர்லாந்து வருகை தந்துள்ளார் என்பதை குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவையும், இந்தியக் கவி ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அயர்லாந்து கவி, டபிள்யு. பி. யீட்ஸ ஆகியோரிடையே நிலவிய நட்புறவை, இந்தியப் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இரு நாடுகளிடையே நல்லுறவை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். சர்வதேச தீவிரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்து இரு தரப்பும், பேண வேண்டிய நெருங்கிய கூட்டுறவு குறித்தும் மோடி வலியுறுதினார். அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்ய வேண்டிய செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, அயர்லாந்து நாட்டின் ஆதரவை பிரதமர் மோடி கோரினார். ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணு சக்தி நாடுகள் குழுவில் இந்தியாவுக்கு உறுப்பினர் வழங்குதல் ஆகியவற்றில், அயர்லாந்து நாட்டின் ஆதரவை, பிரதமர் மோடி கோரினார்.
அயர்லாந்தில் உள்ள ஜான் ஸ்காட்டஸ் பள்ளியின் 20 மாணவர்கள் மற்றும் அயர்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தினரோடு மோடி கலந்துரையாடினார். அப்பள்ளி மாணவர்கள், சமஸ்கிருதத்தில் சுலோகங்களை சொல்லி மோடியை வரவேற்றனர். அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்தியா மற்றும் அயர்லாந்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு உள்ளிட்ட போராட்டங்களை மோடி நினைவு கூர்ந்தார். 2016ம் ஆண்டு நடக்க உள்ள அயர்லாந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியா பங்கு பெறும் என்பதை மோடி தெரிவத்தார்.
இந்தியா உலக அரங்கில் சந்தித்து வரும் சவால்களை குறிப்பிட்ட மோடி, உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கியமான ஒரு நாடு என்பதை குறிப்பிட்டார். பிரிக்ஸ் என அழைக்கப்படும் நாடுகளில் உள்ள ஐ என்ற எழுத்து, சில ஆண்டுகள் முன்பாக பலவீனமாக இருந்ததாகவும், தற்போது ஐ என்ற எழுத்தே வலுவாக உள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அவை, சர்வதேச யோகா தினத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து, உலகெங்கிலும் யோகா எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை மோடி விளக்கினார். இந்தியா வலுவாக இருந்தால் உலக நாடுகள் இந்தியாவின் மீது கவனம் செலுத்தும் என்றார் மோடி. 21ம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதை மோடி குறிபிபட்டார். முதன் முறையக, இது இந்தியாவின் நூற்றாண்டாக மாற உள்ளது என்பதையும் மோடி குறிப்பிட்டார். தற்போது இந்தியாவில் நிலவும் வளர்ச்சி விகிதம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலவினால், இந்தியா வறுமையை சுத்தமாக ஒழித்து விடும் என்று மோடி கூறினார். இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவிகிதம், 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை குறிப்பிட்ட மோடி, இந்த மக்கள் தொகையை வைத்து, வறுமையை ஒழிக்கும் திட்டத்தை இந்தியா நிச்சயமாக அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Had a fruitful meeting with Mr. @EndaKennyTD. India & Ireland can form productive partnerships in trade, economy, technology & other areas.
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
India can be Ireland's anchor in Asia & Ireland can be India's vital gateway to Europe & bridge across the Atlantic. http://t.co/Dkjc9Kt5Nb
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
Overwhelmed by the community programme in Dublin. Recital of Shlokas in Sanskrit by children was very touching. pic.twitter.com/H9xUTmTupu
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
Spoke about growing global optimism towards India & how India's youth will take India to newer heights of progress. http://t.co/IvCe9bWzni
— Narendra Modi (@narendramodi) September 23, 2015