பி.எம்.இந்தியா
இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரதமர் திரு. நரேந்திர மோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பிரதமர் இது பற்றி கூறியிருப்பதாவது
23.9.2015 அன்று நான் அயர்லாந்திற்கு பயணம் செய்ய உள்ளேன். சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் அயர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அயர்லாந்து நாட்டின் தலைவரான திரு. எல்டா கெல்லியுடன் நான் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறேன். வரும் ஆண்டுகளில் அயர்லாந்து நாட்டுடன் சிறந்த பொருளாதார உறவுகளையும் மக்களிடையே நல்லெண்ணங்களையும் எங்களது பேச்சு வார்த்தைகள் ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். அயர்லாந்தில் வாழும் இந்திய சமூகத்துடனும் நான் உரையாட இருக்கிறேன்.
24.09.2015 அன்று அமெரிக்காவில் என்னுடைய பயணத்தை துவக்குகிறேன். அமெரிக்காவில் நான் சென்ற முறை பயணம் மேற்கொண்ட போதும், அந்நாட்டின் அதிபர் ஒபாமா இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வந்திருந்த போதும் ஏற்பட்ட நல்லுறவு மேலும் வலுப்படுத்துவதற்கு எனது தற்போதைய பயணம் உதவும்.
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது ஆண்டு முடிவுற்றதை குறிப்பிடும் வகையில் நடக்க இருக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு செல்கிறேன். ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்திய முக்கியத்துவம் அளித்துள்ளது. ஜூலை மாத்த்தில் நான் 193 நாடுகளின் தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் சீர்திருத்தங்களில் இந்தியாவின் நிலைப் பற்றி கடிதங்கள் எழுதியுள்ளேன். நமது இதுபோன்ற கண்ணோட்டத்திற்கு பல நாட்டின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ள நிலைப் பெறக்கூடிய முன்னேற்றம் பற்றிய உச்சி மாநாட்டில் நான் உரையாற்றுகிறேன். 2015ம் ஆண்டிற்கு பிறகு நிலைப்பெறக் கூடிய முன்னேற்றம் பற்றிய தீர்மானத்தை இந்த மாநாடு உறுதி செய்யும். ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்கும் கலாசாரத்தை கொண்டுள்ள நம் நாட்டில் இருந்து இந்த மாநாட்டில் நான் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். புதிய இலக்குகள் நம் நாட்டின் தற்போது செயல்படுத்தப்படும் முக்கியத் திட்டங்கள் மற்றும் நிலைபெறக் கூடிய முன்னேற்றத்திற்கான இந்தியாவின் கண்ணோட்டம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
அமைதியை நிலை நிறுத்துவதற்காக அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்துள்ள உச்சி மாநாட்டிலும் நான் கலந்துக் கொள்ள இருக்கிறேன். ஐக்கிய நாடுகளின் சபையின் அமைதி பணிகளுக்காக இந்திய படைகளை பெருமளவில் அதற்கு அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து 1,80,000 இந்திய ராணுவப் படைகள் ஐக்கிய நாடுகளின் அமைதிப் பணிகளுக்காக சென்றுள்ளது. மற்ற நாடுகளைவிட எண்ணிக்கை இது மிக அதிகமாகும். கடினமான நேரங்களில் அமைதியை பாதுகாக்க நம் நாட்டின் அமைதி காக்கும் படைகள் உலகின் பல்வேறு இடங்களில் சென்றுள்ளதை எண்ணி நாம் பெருமை அடைகிறோம். அமைதிக்காக தன் உயிர் நீத்த வீரமிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அமைதி காக்கும் முயற்சியில் சிறந்த முறையில் செயல்படுத்த என்னுடைய எண்ணங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆண்டு ஜி-4 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நியூயார்க் நகரில் இந்தியா நடத்த இருக்கிறது. இதில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்படும். அதே போல் ஐக்கிய நாடுகளில் சபையின் 70வது ஆண்டு நிறைவையொட்டி மேற்கொள்ள படவேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விவாதமும் மேலும் விரைவு படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. இதுதான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஆவணமாக உள்ளது.
என்னுடைய பயணத்தின்போது நான் உலகநாடுகளின் பல தலைவர்களை சந்திப்பேன். நிதிப்பிரிவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோருடன் உரையாட உள்ளேன். பார்ச்சூன்-500 என்று அழைக்கப்படும் மிக முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடன் இரவு விருந்து ஒன்றில் சந்திப்பதன் மூலம் இந்தியாவில் அவர்கள் முதலீடு செய்வதற்கு குறித்து விவாதிக்க உள்ளேன். அமெரிக்காவில் வர்த்தகத் தலைவர்கள் பலருடன் சென்ற ஆண்டு நாங்கள் விவாதித்து உள்ளோம். அதன் பயன் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பயணத்தின்போது மேற்கு கடற்கரையில் செப்டம்பர் மாதம் 26, 27ஆம் தேதிகளில் நான் செல்ல இருக்கிறேன். அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். 33 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு கடற்கரை பகுதிக்கு செல்லும் இந்திய பிரதமர் ஒருவராக நான் இருக்கிறேன். இந்தப் பகுதியில் தான் பல தொழிற்சாலைகளை, தொழில்நுட்பங்கள் உருவாகி இருக்கின்றன.
சமூக வலைத்தளமான பேஸ்புக் தலைமையகம் அமைந்திருக்கும் டவுன் ஹாலில் நடக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் அதன் தலைவர் திரு. மார்க் சுக்கர்பெர்க்குடன் கலந்து கொள்கிறேன். உலகப் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிரச்சினைகள் குறிப்பாக, பொருளாதாரம், சமூகம் ஆகியவைக் குறித்து நாங்கள் விவாதிக்க இருக்கிறோம். இதை நீங்கள் தவற விடக்கூடாது. உங்களது கேள்விகளை பேஸ்புக் மூலமாகவேசா, ‘நரேந்திர மோடி மொபைல் ஆப்’ மூலமாகவோ கேட்க உங்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். கூகுள் வளாகத்திலும், டெஸ்லா மோட்டார் நிறுவனத்திலும் உள்ள தொழில்நுட்ப மேம்பாடுகள் பற்றி நான் காண இருக்கிறேன். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வர்த்தகத்துறை மற்றும் ஸ்டான்ட்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி குறித்து பேச உள்ளேன்.
இந்தியா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் நிறுவனங்களை துவக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில் ஆவலாக இருக்கிறேன். பல பிரிவுகளில் நிறுவனங்கள் துவக்குவதில் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை மேலும் விரிவாக்கவும் ஆவலாக உள்ளோம். நிறுவனங்களைத் துவக்கும் பிரிவில் தமது திறமைகளை உலக நாடுகள் காண நாம் விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் தொழில் துவக்கக்கூடிய நிறுவனங்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து அமெரிக்காவில் தொழில் துவக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.
சான் ஜோஸ் என்னுமிடத்தில் அங்கு வாழும் இந்தியர்களுடன் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நான் உரையாட உள்ளேன். இந்தியாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அங்குள்ள இந்தியர்கள் பாடுபடுகிறார்கள். இரு நாடுகளிலும் உள்ள சமூகங்களை இணைப்பதில் இவர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பயணம் சிறப்பாக அமையும். உலகில் பழமையானதும், பெரியதாகவும் உள்ள இரு நாடுகளின் நட்பை மேலும் உறுதிப்படுத்தும். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
My visit to Ireland, a first by a PM in almost 60 years, will focus on improving people-to-people & economic ties. http://t.co/IEn2zqxAsE
— Narendra Modi (@narendramodi) September 20, 2015
My USA visit will build on the substantial ground covered during my visit last year & President Obama's visit to India earlier this year.
— Narendra Modi (@narendramodi) September 20, 2015
In New York, I will take part in summits, bilateral meetings & meetings with top investors. http://t.co/nWJwVLuhoA
— Narendra Modi (@narendramodi) September 20, 2015
My visit to West Coast will focus on start-ups, innovation & technology and how to further support them in India. http://t.co/rQotIQhBeF
— Narendra Modi (@narendramodi) September 20, 2015
Indian diaspora has been a source of immense strength for us. Will interact with Indian community in San Jose. http://t.co/rPWm9L54Fn
— Narendra Modi (@narendramodi) September 20, 2015