பி.எம்.இந்தியா
அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி, அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 7 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு துறைகளில், மாற்றங்களைக் கண்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வசதிகள் கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ள அதேவேளையில், கல்வி, சுகாதாரம், தொழில்முனைவு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். பல தசாப்தங்களாக, அரசியலமைப்பு ரீதியான பல உரிமைகளைப் பெற முடியாமல் இருந்த பெண்கள், விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முழுமையான அமலாக்கத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் திரு மோடி மேலும் கூறினார்.
டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்ததினத்தை நாடு கொண்டாடும் வேளையில், இந்த ஆண்டிற்கான நினைவு தினம், கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக பிரதமர் குறிப்பிட்டார். தேசிய ஒற்றுமைக்காக டாக்டர் முகர்ஜி கொண்டிருந்த வாழ்நாள் அர்ப்பணிப்பு தொடர்ந்து பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அவரது தொலைநோக்குப் பார்வை, 2019 ஆகஸ்ட் 5 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நிறைவேறியதாகவும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள், வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், ஒவ்வொரு குடிமகனும் பெரிய கனவுகளைக் காணவும், தங்களது லட்சியங்களை நனவாக்கவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கவும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
7 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், 370, 35(A) ஆகிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் வரலாறாக மாறியுள்ளன. இது ஜம்மு-காஷ்மீர், லடாக் பஜுதியில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கான பயணத்தில் ஒரு தீர்க்கமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
(Release ID: 2294765)
***
TV/SV/SH
Seven years ago, on this day, Articles 370 and 35(A) became history, marking a decisive new chapter in the journey of Jammu and Kashmir as well as Ladakh.
— Narendra Modi (@narendramodi) August 5, 2026
Since then, the lives of the people of J&K and Ladakh have witnessed wide-ranging transformation. Infrastructure has…