Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மக்களவையில் உரையாற்றிய பிரதமர் டாக்டர். அம்பேத்கரின் பங்கினை எடுத்துரைத்தார்

இந்தியர்களின் சுயமரியாதை மற்றும் ஒற்றுமையை இந்திய அரசியலமைப்பு சாசனம் உறுதி செய்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். அரசியலமைப்பு தினம் மற்றும் அரசியலமைப்பு சாசனத்தின் வடிவமைப்பாளர் டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தை நினைவுகூறும் வகையில் இன்று நடந்த சிறப்பு மக்களவைக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியா போன்ற பன்முக நாடுகளில் நாம் அரசியலமைப்பின் பயன்பாடுகளைத் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நவம்பர் 26 ஆம் நாள் அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை எவ்வளவு புகழ்தாலும் போதாது, முக்கியமாக டாக்டர். அம்பேத்கரின் பங்கினை யாராலும் மறுக்க முடியாது. டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் எண்ணங்களும் போதனைகளும் சரியானதாகவும், உண்மையானதாகவும் எல்லா தலைமுறைக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பதை எப்போதும் கடைசி நியதியாக கொண்டு ஒருமித்த கருத்துக்கள் மற்றும் உடன்படிக்கைகளை கொண்டே ஜனநாயகம் வலுவடைகிறது என்று பிரதமர் கூறினார்.

இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தனது உரிமைகள் மற்றும் கடமைகளை சரிசமமாக பாவிக்க வேண்டும்.

*****