Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரியானா மாநில பொன்விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பு

அரியானா மாநில பொன்விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பு

அரியானா மாநில பொன்விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பு


அரியானா மாநில பொன் விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் குருகிராமில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

விழாவில் பேசிய அவர், அரியானா மாநிலம் உருவாக்கப்பட்ட காலத்தையும், எந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்பதையும் திரும்பிப் பார்க்க வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது என்று கூறினார்.

அரியானா என்பது ஓரளவுக்கு சிறிய மாநிலம். ஆனால் பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது என்று மோடி குறிப்பிட்டார். அரியானாவில் விவசாயிகள் மட்டுமே உள்ளதாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த மாநிலத்தில் இருந்து தொழிலதிபர்கள் முன்மாதிரியாக இருக்கக் கூடிய வகையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு மாநிலத்தில், பெண் சிசுக் கொலைகள் இருக்கக் கூடாது என்று திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார். பெண் சிசுக் கொலைகள் நிகழாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போது அரியானாவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு, அரியானாவின் குடிமக்கள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பொன் விழா ஆண்டுக்கு முன்னதாக, திறந்தவெளி கழிப்பிடமற்றதாக மாநிலத்தை உருவாக்குவது பற்றி அரியானா மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த மாற்றம் நமது கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறிய அவர், அவ்வாறு நிகழும்போது அரியானாவின் வளர்ச்சி உத்வேகம் பெறும் என்றும் தெரிவித்தார்.

***