Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு குறித்து கையெழுத்திடப்பட்ட பிரிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு குறித்த பிரிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த மார்ச் 2015ல், பிரேசில் நாட்டின் பிரசிலியாவில் நடைபெற்ற 3வது பிரிக்ஸ் அறிவியில் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு மற்றும், அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவற்றை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், பிரிக்ஸ் நாடுகளிடையே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பொதுவான இலக்குகளை அடைவது, பிராந்திய ஒத்துழைப்பை நல்குவது, மற்றும், அறிவியல் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவது, ஆகியவை.

இந்தியா சார்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் சார்பாக சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்கள் ஆகியவை இந்த ஒத்துழைப்புக்கான மையங்களாகவும், இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும், இது தொடர்பாக உருவாக்கப்படும் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும் செயல்படும்.