Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அலைக்கற்றையின் பல்வேறு அலைவரிசைகளை தற்போது கைவசம் வைத்துள்ள அல்லது வரவிருக்கும் ஏலத்தில் அவற்றை வாங்க இருக்கின்ற சேவை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை விரைவில் நடைபெறவுள்ள அலைக்கற்றைகளுக்கான ஏலத்தில் பல்வேறு அலைவரிசைகளுக்கும் உரிய அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டண விகிதத்திற்கு தனது அனுமதியை வழங்கியது. இந்த முடிவு அலைக்கற்றைகளுக்கான ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பை தொலைத் தொடர்புத் துறை வெளியிட வழிவகுத்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் முடிவுப்படி, அலைக்கற்றைகளுக்கான பயன்பாட்டுக் கட்டணம் கீழ்கண்ட வகையில் அமையும்:

(அ) வரவிருக்கும் ஏலத்தில் வாங்கப்படும் 700, 800, 900, 1800, 2100, 2300 மற்றும் 2500 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளுக்கான பயன்பாட்டுக் கட்டணம் என்பது, கம்பி மூலமான சேவைகள் நீங்கலாக, ஒழுங்குபடுத்தப்பட்ட ஒட்டுமொத்த வருவாயில் 3 சதவீதம் என்ற அளவில் அமையும்.

(ஆ) (நிர்வாக முறையிலோ அல்லது ஏலம் மூலமாகவே அல்லது பரஸ்பர வர்த்தகத்தின் மூலமாகவோ) ஒரு சேவை நிறுவனத்திற்கு என ஒதுக்கப்பட்ட அனைத்து அலைக்கற்றைகளின் பயன்பாட்டுக் கட்டண விகிதங்களின் மதிப்புச் சராசரி என்பது, 2010ஆம் ஆண்டு ஏலத்தில் பெறப்பட்ட பிடபிள்யூஏ அலைக்கற்றை உள்ளிட்டு, குறைந்தபட்சம் 3 சதவீதம் என்ற வகையில் பயன்பாட்டுக் கட்டணத்தை விதிக்கும் வகையில் அமல்படுத்தப்படும். இது கம்பி மூலமான சேவைகள் நீங்கலாக, அவை பெற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட ஒட்டுமொத்த வருவாயில் 3 சதவீதம் என்ற அளவில் அமையும்.

கைவசமுள்ள அலைக்கற்றை சேவைகள்

+ பொருத்தமான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம்

கைவசமுள்ள ஒட்டுமொத்த அலைக்கற்றைகளின் அளவு

= மதிப்புச் சராசரி என்ற வகையில் இறுதிப்படுத்தப்படும்.

அதைப் போன்றே, ஒவ்வொரு சேவைப் பகுதிக்கான மதிப்புச் சராசரியும் சேவை நிறுவன வாரியாக நிர்ணயிக்கப்படும்.

(இ) இவ்வகையில் சேவை நிறுவனங்கள் 2015-16ஆம் ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய தொகையானது 2015-16க்கு முன்பாக வாங்கிய/ஒதுக்கப்பட்ட 2300 அல்லது 2500 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை நீங்கலாக, வரவிருக்கும் ஏலத்தில் வாங்கும் அலைக்கற்றையையும் கணக்கில் எடுத்துக் கொண்ட வகையில் இறுதிப்படுத்தப்படும். இதுவே இந்த சேவை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணமாக கருதப்படும். மேலும் இந்த சேவை நிறுவனங்களின் ஒட்டுமொத்த சராசரி வருமானம் குறையுமானால், அதற்குத் தகுந்தவகையில் பயன்பாட்டுக் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

இந்த ஏற்பாடு எளிதான, வெளிப்படையான, ஒரே மாதிரியான பயன்பாட்டுக் கட்டண முறையை சட்டத்திற்கு உகந்த வகையில் உருவாக்க வழிவகுப்பதோடு, வருமானத்தை வேறு வகையில் கணக்கு வைக்கும் முறையை தவிர்க்கவும் உதவும்.