Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுஹாஸ் எல் யதிராஜுக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் பேட்மிண்டன் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற சுஹாஸ் எல் யதிராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

அவரது நிலைத்தன்மை, விடாமுயற்சி, விளையாட்டின் மீதான ஆர்வம் ஆகியவை உண்மையில் போற்றத்தக்கவை என்று கூறிய பிரதமர், இந்த சாதனைக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர் தொடர்ந்து சிறந்து செய்லபடுவதற்கு ஊக்குவிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் பதிவிட்டுள்ளதாவது:

“சுஹாஸ் எல். யதிராஜ் சர்வதேச விளையாட்டுப் போட்டியில்,தொடர்ந்து  தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறார்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின், ஆடவர் ஒற்றையர்  பேட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.

அவரது நிலைத்தன்மை, விடாமுயற்சி மற்றும் விளையாட்டின் மீதான ஆர்வம் ஆகியவை உண்மையில் போற்றத்தக்கவை.

சுஹாஸ்-ன் இந்த சாதனைக்கு எனது வாழ்த்துக்கள். அவர் தொடர்ந்து சிறந்து விளங்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326737&reg=3&lang=1

(Release ID: 2326737)

****

TV/SV/SH