ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத், மனிஷா ராமதாஸ் ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டுப் போட்டி முழுவதும், இவர்களது குழுப்பணி, மன உறுதி, போட்டித்தன்மை ஆகியவை வெளிப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், இவர்களின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டியதுடன், இவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸின் பாராட்டுக்குரிய முயற்சி!
இந்தத் திறமையான அணி, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
போட்டி முழுவதும் இவர்களது குழுப்பணி, மன உறுதி, போட்டித்தன்மை ஆகியவை சிறப்பாக வெளிப்பட்டன.
இரு விளையாட்டு வீரர்களின் செயல்பாட்டிற்கும் பாராட்டுக்கள். இவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள் – பிரதமர்”
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326729®=3&lang=1
(Release ID: 2326729)
****
TV/SV/SH
A commendable effort by Pramod Bhagat and Manisha Ramadass! The talented duo has secured Bronze in the Mixed Doubles SL3-SU5 Para Badminton event at the Asian Para Games 2026. Their teamwork, determination and competitive spirit have been evident throughout the tournament. Compliments to both athletes for their performance and best wishes for their future endeavours: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026