2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி 42/டி 63 பிரிவில், அபாரமான செயல் திறனை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய சாதனையையும் படைத்த சைலேஷ் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது அவரது திறமை, சீரான செயல்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்ட திரு மோடி, அவரது செயல்திறனால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி 42/டி 63 பிரிவில் சைலேஷ் குமார் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார்! அவரது திறமை, சீரான செயல்பாடு, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையாக இது அமைந்துள்ளது. அவரது செயல்திறனால் இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326793®=3&lang=1
****
TV/BR/SH
Shailesh Kumar has delivered a magnificent performance in the Men's High Jump T42/T63 event at the Asian Para Games 2026, winning Gold with an impressive jump and setting a new Games Record! This is a remarkable accomplishment that reflects his talent, consistency and dedication. India is proud of him: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026