2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் இரட்டையர் பிரிவு எஸ்எல்3-எஸ்யு5 பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற நவீன் சிவகுமார், சூர்ய காந்த் யாதவ் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவில் இந்தியா வென்றிருக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.
இரண்டு வீரர்களும் தங்கள் முதல் போட்டியிலேயே அடைந்திருக்கும் இந்த வெற்றி, தனிப்பட்ட முறையிலும் அவர்களுக்கு ஒரு சிறப்பான மைல்கல்லாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, அவர்களது குழுப்பணி, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவை பாராட்டுக்குரியவை என்று தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“இந்திய பாரா பேட்மிண்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம்!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் இரட்டையர் பிரிவு எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில், நவீன் சிவகுமார், சூர்ய காந்த் யாதவ் ஆகியோர் இந்தப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்றுள்ளனர். இரண்டு வீரர்களும் தங்கள் முதல் போட்டியிலேயே அடைந்திருக்கும் இந்த வெற்றி, தனிப்பட்ட முறையிலும் அவர்களுக்கு ஒரு சிறப்பான மைல்கல்லாக அமைந்துள்ளது. அவர்களின் குழுப்பணி, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவை போற்றுதலுக்குரியவை. அவர்களுக்கு நல்வாழ்த்துகள்! – பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326792®=3&lang=1
****
TV/BR/SH
A historic Bronze for Indian Para Badminton! Naveen Sivakumar and Surya Kant Yadav have secured India's first-ever medal in the Men's Doubles SL3-SU5 category at the Asian Para Games 2026. This achievement on their debut is a special milestone for both athletes. Their teamwork, perseverance and dedication deserve appreciation. Congratulations to them: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026