Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவிக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் தனிநபர் காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில், தனது பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கம் வென்ற ஷீத்தல் தேவியின் அபாரமான செயல்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷீத்தல் தேவியின் துல்லியம், சீரான செயல்பாடு, விளையாட்டுத் திறனில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் வியக்கத்தக்கவை என்று குறிப்பிட்ட பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் தனிநபர் காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் ஷீத்தல் தேவி அபாரமாகச் செயல்பட்டுள்ளார்! அவர் தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டதுடன், தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கம் வென்றுள்ளார். அவரது துல்லியம், சீரான செயல்பாடு, விளையாட்டுத் திறனில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையில் வியக்கத்தக்கவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர்”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326778&reg=3&lang=1

(Release ID: 2326778)

****

TV/SV/SH